நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ விநாயகர் ஆலய புனருத்தாபன மகா கும்பாபிஷேகம் !

18 Jun, 2024 | 10:03 AM
image

நாவலப்பிட்டி, கதிரேசன் கல்லூரியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ  விநாயகர் ஆலய புனருத்தாபன மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

நூற்றாண்டின் முதல் நிகழ்வாக நடைபெறும் இந்த கும்பாபிஷேக பெருவிழாவானது முதலாவது நாளாக நேற்று திங்கட்கிழமை  (17)  கிரியாகால நிகழ்வுகள் ஆரம்பமானது. 

அதில் பிரதிஷ்டா சங்கல்பம், விநாயகர் வழிபாடு, தேவ பிராமண, அணுக்ஞை திரவிய விபாஹம், திரவிய பூஜை, மகா கணபதி ஹோமம் , மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், கோ பூஜை, சூர்யா அக்கினி சம்கிரகணம் ஆகிய பூஜைகள் நடைபெற்றன. 

பூஜா கிரியை நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதிஷ்டா குருக்களினால் பூஜைக்குரிய விளக்கங்களும் பக்த அடியார்களுக்கு கூறப்பட்டது.  

அதனைத் தொடர்ந்து கங்கா தீர்த்தம் எடுத்து வருவதற்காக கொந்தனாவ காளி கோயிலுக்கு சென்று அங்கு மகாவலி ஆற்றிலிருந்து புனித தீர்த்தமானது ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு அங்கு, ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டு பக்த அடியார்களுடன் கதிரேசன் நாமத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கதிரேசன் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் , கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், கதிரேசன் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள்,  மாணவர்கள் உள்ளடங்களாக பக்த அடியார்கள் நந்தி கொடிகளோடு தீர்த்த குடங்களை ஏந்தி   ஸ்ரீ சித்தி விநாயகர்   தீர்த்தபவனியானது நாவல் நகர் முத்துமாரியம்மன் தேவஸ்தான வழிபாட்டோடு பக்தர்கள் புடை சூழ ஆலயத்தை வந்தடைந்தது.       

பின்னர் மாலை 4 மணி முதலாக புண்ணியாக வாஜனம் கிராம சாந்தி வாஸ்து, சாந்தி பிரவேசப்பலி, மிருதங்க சந்திரகனம்,  பிரசன்ன பூஜை, கொடியேற்றத்துடன் கும்ப யாகசாலா பிரவேசம், யாக பூஜை, அக்கினி காரியம் ஹோமம், தீபாராதனை தூபி ஸ்தாபனம், பிம்பஸ்தாபனம், அஷ்ட பந்தனம் ஆகிய நிகழ்வுகளுடன் முதல் நாள் பூஜை இனிதே நிறைவடைந்தன. 

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39
news-image

மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

2026-08-09 16:09:37
news-image

'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026' கலாசார,...

2026-08-09 14:47:40
news-image

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு...

2026-08-08 14:48:42
news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31