வர்த்தகரைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் சிறிமான்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டே, மாதிவெல பிரதேசத்தில் வைத்து வர்த்தகர் ஒருவரை தாக்கிக் கடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் சிறிமான்னவை நுகேகொட பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (16) பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் சிறிமான்ன உள்ளிட்ட 8 பேர் கோட்டே, மாதிவெல பிரதேசத்தில் வைத்து வர்த்தகர் ஒருவரைத் தாக்கி, கடத்திச் சென்றுள்ளனர்.
இதேவேளை, பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் சிறிமான்ன தனது ஜீப்பில் கடத்தலை மேற்கொண்டமை சி.சி.ரி.வி. காணொளி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM