பசறையில் வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் விபத்து; இருவர் பலத்த காயம்

Published By: Vishnu

17 Jun, 2024 | 07:33 PM
image

லுணுகலை பசறை வீதியில் ஹொப்டன் 154 ஆவது மைல் கல்லுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று திங்கட்கிழமை (17) மாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

49,50 வயதுடைய அசேலபுர பதுளை , ஹிந்தகொட பதுளை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர். 

லுணுகலையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் 154 ஆவது மைல் கல்லுக்கு அருகில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் ஹொப்டன் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். குடா மக்களின் வாழ்க்கைத் தரத்தை...

2024-07-12 16:21:39
news-image

எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள...

2024-07-12 16:18:17
news-image

முத்து விநாயகரின் 60 பவுண் நகைகள்...

2024-07-12 15:55:47
news-image

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் வரப்பிரசாதத்தை வழங்கும்...

2024-07-12 15:05:16
news-image

ஜனாதிபதி தேர்தல் ; நிதி சட்டரீதியான...

2024-07-12 15:20:20
news-image

மலேசியாவில் இலங்கையர் உட்பட 88 வெளிநாட்டவர்கள்...

2024-07-12 15:55:03
news-image

யாழ். நெல்லியடியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2024-07-12 15:59:03
news-image

வட்டகொடை தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

2024-07-12 15:46:25
news-image

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

2024-07-12 13:00:30
news-image

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில்...

2024-07-12 13:46:56
news-image

பதுளை - கந்தகெட்டிய பகுதியில் சட்ட...

2024-07-12 13:46:35
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-07-12 12:47:48