யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சி அக்கராயன் காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தபோது குறித்த நபர் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் நேற்று (16) கைதுசெய்யப்பட்டார்.
இதன்போது குறித்த நபரிடமிருந்து 3.800 கிராம் ஜஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் குறித்த நபர் ஒப்படைக்கபட்டார்.
இவர் யாழ் மாவட்டத்தில் பல குற்றச்செயல்களுக்காக நீதிமன்றங்களினால் திறந்த பிடியாணை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் 12ம் திகதி குறித்த கைதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார். இதன் காரணமாக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM