சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தப்பியோட்டம் ; இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

17 Jun, 2024 | 05:59 PM
image

சிலாபம் பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கடந்த 13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் சிலாபம் பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் பொலிஸ் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய போதைப்பொருள் கடத்தல்காரரொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்  தப்பிச் செல்வதற்கு உதவி செய்ததாக சந்தேகிக்கப்படும்  இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் 350 போதை...

2024-07-20 01:00:26
news-image

எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய...

2024-07-20 00:57:33
news-image

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும்...

2024-07-20 00:54:48
news-image

ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் அநுர...

2024-07-20 00:50:48
news-image

தேர்தல் சட்டங்களை மீறுவது மனித உரிமை...

2024-07-19 20:07:45
news-image

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான...

2024-07-19 23:11:07
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை...

2024-07-19 22:57:33
news-image

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால்...

2024-07-19 22:49:56
news-image

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள்...

2024-07-19 22:45:28
news-image

அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள் :...

2024-07-19 19:56:24
news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:35:12
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12