வெற்றியை அள்ளித்தரும் பாராயண பரிகாரம்...!

Published By: Digital Desk 7

17 Jun, 2024 | 08:42 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களுக்கு தெரிந்த சூட்சமமான முறையில் தொழில் செய்து அதில் வெற்றிகரமாக லாபத்தை ஈட்டி தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வருவர். ஆனால் சிலர் வசதிகள்- வாய்ப்புகள் இருந்தும், முதலீடுகள் இருந்தும், தொழிலின் நுட்பத்தை அறிந்திருந்தாலும், விவரிக்க இயலாத பல காரணங்களால் தொடர் தோல்விகளை சந்தித்து, நஷ்டங்களை எதிர்கொண்டு, விரக்தியில் வாழ்ந்து கொண்டிருப்பர்.‌ மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா..! வெற்றி பெற மாட்டோமா..! என்று தொடர் தேடலிலும் ஈடுபட்டிருப்பர். இவர்களுக்கு எம்முடைய முன்னோர்கள் பாராயண பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.

உடனே எம்மில் சிலர் பாராயண பரிகாரமா..? ஆம். எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இறை வழிபாட்டு பரிகாரம், வாழ்வியல் பரிகாரம், ஆலய வழிபாட்டு பரிகாரம், டிஎன்ஏ பரிகாரம், தான பரிகாரம், விளக்கு பரிகாரம் என ஏராளமான பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள். அதனைப் போல் இது மந்திரத்தை பாராயணம் செய்யும் ஒரு பரிகார முறை. இந்த கலியுகத்தில் முருகப்பெருமானை நேரில் கண்டு தரிசிக்கும் பாக்கியம் பெற்ற பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம் எனும் மந்திரத்தை மந்திர வாசகத்தை மந்திர மொழியை பாடலை  பாராயணம் செய்ய வேண்டும். இதற்கென்று பல வழிமுறைகளையும் எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

முதலில் சஸ்திர பந்த செய்யுளை காண்போம்.

வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா

மாலைபூ ணேமதிற மால்வலர்தே- சாலவ

மாபாசம் போக மதிதேசார் மாபூதம்

வாபாதந்  தாவேலவா..!

சஸ்திர பந்தம் எனும் இந்தப் பாடலை பாராயணம் செய்யும் முன் ஞானசம்பந்தர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகிய குருமார்களை வணங்கி விட்டு, இதனை பாராயணம் செய்ய தொடங்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமை -முருகனுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகை & விசாகம், சஷ்டி திதி ஆகிய நாட்களில் முருகப்பெருமானின் சன்னதியில் இதனை பாராயணம் செய்வது நல்லது. அதே தருணத்தில் இந்த சாஸ்திர பந்தத்தை நாளாந்தம் இருபத்தியேழு முறை பாராயணம் செய்ய வேண்டும். காலை - மாலை என இரண்டு வேளைகளிலும் இதனை பாராயணம் செய்ய வேண்டும். அதுவும் சூரிய உதயத்திற்கு முன்பு - சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் இதனை பாராயணம் செய்வது நல்லது.

உங்களது வீட்டிற்கு அருகே உள்ள ஆலயத்தில் இருக்கும் முருக பெருமானின் சன்னதிக்கு முன் சஸ்திர பந்தத்தை பாராயணம் செய்வதில் ஏதேனும் அசௌகரியம் இருப்பதாக உணர்ந்தால் உங்களுடைய வீட்டிலேயே முருக பெருமானின் திருவுருவப்படத்தை வைத்து இதனை பாராயணம் செய்யலாம். வீட்டிற்கு வேல் வைத்து பூஜை செய்தும் இதனை பாராயணம் செய்யலாம்.

நாளாந்தம் காலை - மாலை என இரண்டு வேளைகளில் சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய உதயத்திற்கு பின்பும் சாஸ்திர பந்தத்தை இருபத்தியேழு முறை பாராயணம் செய்வதால் நேர் நிலையான ஆற்றல்கள் அதிகரித்து உங்களை சுற்றி இருக்கும் அல்லது உங்களை நஷ்டமடையச் செய்த தொழிலில் இருந்த மாய தடைகளை அகற்றி, லாபமான பாதையில் செயல்பட வைக்கும்.

தொழில் மட்டுமல்ல வேலை வாய்ப்பு- புத்திர பாக்கியம்- திருமண தடை என உங்களது பிரச்சனை எதுவாக இருந்தாலும், இந்த சஸ்திர பந்த பாராயண பரிகாரத்தை அதற்கே உரிய வழிமுறையின் படி தொடர்ச்சியாக கடைப்பிடித்து வந்தால் முருகப்பெருமானின் அருளால் சுப பலன்கள் கிடைத்து வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுவதை அனுபவத்தில் உணரலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காரிய வெற்றியை அள்ளித்தரும் பிரம்ம முகூர்த்த...

2024-07-13 16:04:21
news-image

சித்தர்களின் ஆசியையும் அருளையும் பெறுவதற்கு எளிய...

2024-07-11 17:36:37
news-image

சந்திராஷ்டமத்தைக் கண்டு பயம் கொள்ளலாமா...?!

2024-07-10 17:50:31
news-image

அன்ன தோஷத்தை அகற்றும் நந்தி பகவான்...

2024-07-09 17:55:38
news-image

கண்களின் கர்மாவை அகற்றும் எளிய பரிகாரம்..!?

2024-07-06 18:20:54
news-image

கும்பத்தின் மீது தேங்காய் வைப்பதன் பின்னணி...

2024-07-05 17:09:04
news-image

பண வரவை அதிகரிப்பதற்கான எளிய வழிமுறைகள்...!?

2024-07-04 16:37:48
news-image

செல்வ வளத்தை அள்ளி வழங்கும் கோதூளி...

2024-07-03 16:50:28
news-image

அயலகத்தில் வாழ்பவர்கள் குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான...

2024-07-02 23:38:29
news-image

உங்களின் செல்வ நிலையை உயர்த்தும் ஆருடா...

2024-07-01 19:31:15
news-image

பண வரவை அதிகரித்துக் கொள்வதற்கான எளிய...

2024-06-29 16:35:07
news-image

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் மாத்ரு தோஷம்..!

2024-06-28 17:55:45