ஜீ - 5 தளத்தில் வெளியாகி இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் 'பருவு' தமிழ் இணைய தொடர்

Published By: Digital Desk 7

17 Jun, 2024 | 05:30 PM
image

தெலுங்கில் தயாரான 'பருவு' எனும் இணைய தொடர், ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கிறது.

தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'பருவு' எனும் இணைய தொடர் தெலுங்கில் தயாராகி இருக்கிறது.

இவருடன் நரேஷ் அகஸ்தியர், நாக பாபு, பிரணிதா பட்நாயக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இணைந்து இயக்கி இருக்கும் இந்த இணையத் தொடரை தயாரிப்பாளர் சுஷ்மிதா கொனிடேலா தயாரித்திருக்கிறார். இந்த இணையத் தொடருக்கு பவன் சதினேனி தலைமையேற்றிருக்கிறார்.

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகி உள்ள 'பருவு' இணையத் தொடர்- சாதிய ரீதியிலான ஆதிக்க வெறியர்களின் ஆணவ கொலைகளுக்கு பலியாகி விடுவோமோ..! என்ற அச்சத்தில் ஒரு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தங்களது காதலையும், வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள போராடுகிறார்கள்.

அவர்களின் போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான் இந்த இணைய தொடரின் பரபர திரைக்கதை.‌ அன்பிற்காகவும், பாசத்திற்காகவும், விசுவாசத்திற்காகவும், மரியாதையை பாதுகாப்பதற்காகவும் ஒருவர் எவ்வளவு தூரத்திற்கு பயணிப்பார் என்பதை பற்றியும், மனிதர்களின் மறுபக்கத்தையும் இந்த இணைய தொடர் வெளிப்படுத்தி இருக்கிறது. இதனால் ரசிகர்களிடையே இதனை காண்பதற்கு பெரும் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது.

நடிகை நிவேதா பெத்துராஜ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'பருவு' எனும் இணையத் தொடரின் முதல் அத்தியாயத்தை ஜீ5 டிஜிட்டல் தளத்தில் இலவசமாக காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜுன் தாஸுடன் முதன்முறையாக இணையும் அதிதி...

2024-07-11 21:59:09
news-image

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'...

2024-07-11 18:07:30
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி...

2024-07-11 17:54:39
news-image

வெளியீட்டு திகதியை அறிவித்த விஜய் ஆண்டனியின்...

2024-07-11 18:06:45
news-image

சுசீந்திரன் இயக்கும் '2 K லவ்...

2024-07-11 18:06:33
news-image

அமீர் - சமுத்திரக்கனி தொடங்கி வைத்த...

2024-07-11 18:06:14
news-image

வெங்கட் பிரபு வழங்கும் 'நண்பன் ஒருவன்...

2024-07-11 18:06:00
news-image

யூரோ 2024 :16 வயதில் கோல்...

2024-07-11 12:47:35
news-image

விஜய் சேதுபதி - சூரி இணைந்து...

2024-07-10 17:26:26
news-image

ஆகஸ்டில் வெளியாகும் திரிஷாவின் முதல் இணைய...

2024-07-10 17:41:46
news-image

கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார்...

2024-07-10 17:25:00
news-image

இருட்டு அறையில் முரட்டு தேவதையாக மிரட்டும்...

2024-07-10 16:48:46