தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் தங்களது வாரிசுகளை நடிகர்களாக கலை உலகத்திற்கு அறிமுகப்படுத்துவது இயல்பு. அந்த வகையில் இந்த தலைமுறையின் முன்னணி நட்சத்திர நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் வாரிசான சூர்யா சேதுபதி, 'பீனிக்ஸ் - வீழான்' எனும் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
சண்டை பயிற்சி இயக்குநரான அனல் அரசு திரைப்பட இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் 'பீனிக்ஸ்- வீழான்'. இதில் சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், அபி நட்சத்திரா, வர்ஷா, நவீன், நந்தா சரவணன், 'ஆடுகளம்' முருகதாஸ், 'ஆடுகளம்' நரேன், ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ கே பிரேவ்மேன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திருமதி ராஜலக்ஷ்மி அனல் அரசு தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்பிற்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் அனல் அரசின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதனை இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் சூர்யாவின் தந்தையும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் சேதுபதி வெளியிட்டார்.
டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளில் ஆக்சன்- எமோஷன்- சென்டிமென்ட் என கொமர்ஷல் அம்சங்கள் அதிகமாக இருப்பதாலும், சூர்யா சேதுபதி குத்துச்சண்டை வீரர் வேடத்தில் நடித்திருப்பதாலும்.. இந்த டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. மேலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM