யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : யாழ் கடற்தொழிலாளர் அறிவிப்பு

17 Jun, 2024 | 05:23 PM
image

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளை செவ்வாய்க்கிழமை (18)  யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், எமக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில் பாராளுமன்றத்தையும் முற்றுகையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .  

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று  திங்கட்கிழமை (17)  நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர் . 

கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் சிறீ கந்தவேல் புனித பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில், 

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாடு எமது கடற்பகுதிகளில் அரங்கேறிவருகிறது. இதனால் எமது கடற்றொழிலாளர்கள் பெருமளவு பாதிபாபை எதிர்கொள்கின்றனர்.

நாளைசெவ்வாய்க கிழமை  காலை 10 மணிக்கு இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர், துறைசார்ந்த திணைக்களங்கள் விரைந்து செயற்பட்டு இந்திய இழுவை மடி படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் பாராளுமன்றத்தை முற்றுகையிட எமது அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன.

யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் கருத்து தெரிவிக்கையில், 

இந்திய இழுவைமடி கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் எமது மக்கள் வீதிக்கு வந்து பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டி வரும். சிறுவர் தொடங்கி பெரியவர் இதன்மூலம் பாதிப்புக்களை எதிர்கொள்வர்.

இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மனித நேயத்துடன் இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் செயற்படவேண்டும். இந்தியாவின் மிலேச்சத்தனமாகவே இதனை பார்க்கிறோம்.

இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக செவ்வாய்க்கிழமை  நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து கடற்றொழிலாளர்களையும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம் - என்றார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் 350 போதை...

2024-07-20 01:00:26
news-image

எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய...

2024-07-20 00:57:33
news-image

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும்...

2024-07-20 00:54:48
news-image

ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் அநுர...

2024-07-20 00:50:48
news-image

தேர்தல் சட்டங்களை மீறுவது மனித உரிமை...

2024-07-19 20:07:45
news-image

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான...

2024-07-19 23:11:07
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை...

2024-07-19 22:57:33
news-image

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால்...

2024-07-19 22:49:56
news-image

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள்...

2024-07-19 22:45:28
news-image

அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள் :...

2024-07-19 19:56:24
news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:35:12
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12