கன்னட நடிகர் ஸ்ரீ முரளி வெளியிட்ட 'சௌகிதார்'

Published By: Digital Desk 7

17 Jun, 2024 | 04:46 PM
image

கன்னட திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான பிருத்வி அம்பர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'சௌகிதார்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கன்னடத்தின் முன்னணி நட்சத்திர நடிகரான ஸ்ரீ முரளி வெளியிட்டார்.

இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா இயக்கத்தில் உருவாகும் 'சௌகிதார்' படத்தில் பிருத்வி அம்பர் கதையின் நாயகனாக நடிக்கிறார். சச்சின் பஸ்ரூர் இசையமைக்கும் இந்த திரைப்படத்தினை வித்யா சேகர் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் தயாரிக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் தயாராகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'கே ஜி எஃப்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு கன்னடத்திலிருந்தும் பான் இந்திய திரைப்படங்கள் தயாராவது அதிகரித்து விட்டதாக தமிழ் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படப்பிடிப்புடன் தொடங்கிய கார்த்தியின் 'சர்தார் 2'

2024-07-13 18:57:21
news-image

பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' டீசர் வெளியீடு

2024-07-13 18:58:37
news-image

மணிரத்னம் வெளியிட்ட ஹன்சிகா மோத்வானியின் 'காந்தாரி'...

2024-07-13 18:28:20
news-image

நயன்தாரா நடிப்பில் தயாராகும் 'மூக்குத்தி அம்மன்...

2024-07-13 18:24:20
news-image

இயக்குநர் அட்லி வெளியிட்ட 'மிஸ்டர் ஹவுஸ்...

2024-07-13 18:21:04
news-image

டீன்ஸ் - விமர்சனம்

2024-07-13 16:01:34
news-image

டட்டூவை மையப்படுத்தி தயாராகும் 'லவ் இங்க்'

2024-07-13 11:08:19
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்...

2024-07-13 10:51:25
news-image

இந்தியன் 2 - விமர்சனம்

2024-07-13 09:50:54
news-image

அர்ஜுன் தாஸுடன் முதன்முறையாக இணையும் அதிதி...

2024-07-11 21:59:09
news-image

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'...

2024-07-11 18:07:30
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி...

2024-07-11 17:54:39