டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் நகைச்சுவை கலந்த இணைய தொடர்களுக்கு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் முன்னணி டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும், ஆதரவையும் பெற்ற இணைய தொடர் 'வேற மாரி ஆபீஸ்'. இந்த இணையத் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கி இருக்கிறது. ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும் இந்த 'வேற மாதிரி ஆபீஸ் சீசன் 2' இணைய தொடரின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ஜஷ்வினி இயக்கத்தில் உருவாகும் இந்த இணைய தொடரில் ஆர் ஜே விஜய், சௌந்தர்யா, நஞ்சுண்டான், லொள்ளு சபா மாறன், ஜனனி அசோக்குமார், ஜெயசீலன், ரவீனா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சத்யா ஒளிப்பதிவு செய்யும் இந்த இணையத் தொடருக்கு ராகவ் இசையமைக்கிறார். இதனை ஆஹா டிஜிட்டல் தளத்திற்காக கனா புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவகாந்த் தயாரிக்கிறார்.
இணைய தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், '' வேற மாறி ஆபீஸ் எனும் இணைய தொடரின் முதல் சீசனில் நடித்த நிஷா (ஜனனி அசோக்குமார்) தலைமையில் ஊழியர்கள் அனைவரும் புதிதாக ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்குகிறார்கள். இதனை வெற்றி பெற வைப்பதற்காக அவர்கள் சந்திக்கும் சவால்களும், ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் பிரச்சனைகளும் தான் இதன் கதை. இதனை நகைச்சுவை கலந்து சொல்லப் போகிறோம். முதல் சீசனை விட புதிய களம் -புதிய வடிவம் - கூடுதல் சுவராசியம் ஆகியவற்றுடன் இந்த இணையத் தொடர் உருவாகவிருக்கிறது'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM