''இந்தியாவில் உள்ள வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் எல்லாம் ஒரு கருப்பு பெட்டி. அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை'' என மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்தியாவில் பதினெட்டாவது மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி முடிவுகளும் வெளியிடப்பட்டன. இதில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி நூறு இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி சமூக ஊடகத்தில் மின்னணு இயந்திரங்களை பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், '' இந்தியாவில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்லாம் கருப்பு பெட்டி. அவற்றை ஆய்வு செய்ய ஒருவரும் அனுமதிக்கப்படுவதில்லை. நம்முடைய தேர்தல் நடைமுறையில் உள்ள வெளிப்படை தன்மை பற்றி தீவிர கவலைக்குரிய விடயங்கள் கேள்வியாகவே உள்ளன'' என அதில் குறிப்பிட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM