ஆரையம்பதி பொதுச்சந்தையில் வர்த்தக நிலையங்களைக் கொண்ட கட்டிடத்தொகுதி திறப்பு

Published By: Digital Desk 7

17 Jun, 2024 | 02:52 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் கொண்ட கட்டிடத்தொகுதி இன்று திங்கட்கிழமை (17)  திறந்துவைக்கப்பட்டது.

உலக வங்கியின் நிதி பங்களிப்பில் மண்முனைப்பற்று பிரதேசபையினால் சுமார் 69இலட்சம் ரூபா செலவில் இந்த வர்த்தக நிலைய தொகுதி அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா மண்முனைப்பற்று பிரதேசபையின் செயலாளர் யோ.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்,இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தட்சணகௌரி டினேஸ்,மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரகாஸ்,கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன்,பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் இணைப்பாளர் டினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கடைத்தொகுதிகள் திறந்துவைக்கப்பட்டதை தொடர்ந்து அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,

தமிழ் பொது வேட்பாளர் என்பது தனி ஒரு கட்சி தீர்மானிக்க முடியாது ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மலையக இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுடைய ஒட்டுமொத்த தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் தலைமைகள் அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதிகள் சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் அனைவரையும் ஒன்றிணைத்து தான் தமிழ் பொது வேட்பாளரின் விடயத்தை பற்றி பேச வேண்டும்.

அதை விட்டுவிட்டு அன்று மட்டக்களப்பில் பார்த்தேன் நான்கு பேர் சேர்ந்து அவர்கள் பொது வேட்பாளர்களை தீர்மானிக்கின்றார்கள் அப்போது ஒரு நண்பர் கேட்டார் நீங்கள் ஏன் வரவில்லை என்று அதற்கு இவர்களுக்கே அழைப்பில்லை ஒரு முட்டைகோஸ் குரூப் ஒன்று நான்கு பேர் கூடியிருந்து அவர்கள் புது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடுகிறார்கள்.

இவை அனைத்தும் உங்களுக்கு நன்றாக தெரியும் வாயால் வத்தலை கொடி நாட்டுகின்ற கேஸ்தான் இவர்கள் ஆனால் வாயால் வத்தலை கிழங்கு நாட்டாமல் நாங்கள் உண்மையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

அதற்கான களத்தினை அமைக்காமல் விரும்பியவாறு ஒவ்வொருவரும் நான்கு பேர் கூடுவது மூன்று பேர் கூடிக்கொண்டு இவ்வாறான விடயங்களை பேச முடியாது இது முக்கியமான விடயம் ஏனெனில் வர இருப்பது ஜனாதிபதி தேர்தல்.

நாங்கள் தமிழர்கள் மிக கவனமாக காய்களை நகர்த்த வேண்டும் ஏனென்றால் உங்களுடைய நீண்ட கால பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெற வேண்டும் உடனடி பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற வேண்டும் அபிவிருத்தி சார்ந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் அனைத்தினையும் கருத்தில் கொண்டு தான் நாங்கள் இந்த ஜனாதிபதி விடயத்திலே மிக கவனமாக செயல்பட வேண்டும் அதிலும் ஒருமித்து செயல்பட வேண்டும்.

கிழக்கு மாகாண ஆளுனர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாடு முன்னேற்ற பாதையினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது ஒன்றரை வருடத்திற்கு முன்னர் இவ்வாறான கடைகள் திறக்கப்படுமா என்ற கேள்வி இருக்கின்ற கடைகளை மூடிக்கொண்டு இருந்தார்கள் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க வந்து இந்த நாட்டினை மீட்டு எடுத்து இந்த நாட்டில் மக்கள் வாழலாம் என்கின்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றார்.

அபிவிருத்தி வேலைகள் என்கின்ற போது அந்த பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு முழுமையாக அது பிரயோசனமாக இருக்க வேண்டும்.

இந்த பகுதி மாத்திரம் அல்ல மட்டக்களப்பு மாவட்ட முழுவதும் குறைந்தபட்சம் ஆயிரம் கடைகள் ஆவது திறக்க வேண்டும் என கூறியிருக்கின்றார்கள் இந்த கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு நான் கொண்டு செல்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு பிரான்ஸ்...

2025-06-17 15:03:55
news-image

தேசிய மட்ட சங்கீதப் போட்டியில் புனித...

2025-06-17 15:20:03
news-image

கொழும்பு பங்குச் சந்தையில் மணி ஒலிக்கச்...

2025-06-16 19:31:42
news-image

இலவச இசைக்கருவி பயிற்சி

2025-06-16 14:03:14
news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29
news-image

இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிலையான சமாதானத்தை...

2025-06-15 20:08:40
news-image

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு

2025-06-15 17:43:24
news-image

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய...

2025-06-14 11:28:41
news-image

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில்...

2025-06-13 20:55:14
news-image

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய...

2025-06-12 16:29:26
news-image

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

2025-06-12 13:40:43