மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஞங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் விரைந்தனர். இந்த விபத்தில் 2 ரயில்களின் பல பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் சரக்கு ரயிலை ஓட்டிய லோக்கோ பைலட் உள்பட 5 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரயில் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மேற்குவங்க முதுலமைச்சர் மம்தா பானர்ஜி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ரயில் விபத்து குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தள பக்கத்ததில், “மேற்கு வங்கத்தில் நேரிட்ட ரயில் விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. ரயில் விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர், மருத்துவக் குழுவினரை அனுப்பி வைத்துள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த விபத்து குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:
“எதிர்பாராத விபத்து நடைபெற்றுள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றது. ரயில்வே துறை தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM