வாகன அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய ஒருவரை தாக்கியதாக இரு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை தொடங்கொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தொடங்கொட சந்தியில் வைத்து சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி மோட்டார் வாகனம் செலுத்திய நபரொருவரை கடுமையாக தாக்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.