கொழும்பு வெல்லம்பிட்டி, கோகிலாவத்தையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 250க்கும் மேற்பட்ட மாணவர்களின் குடும்பங்களை தெரிவு செய்து, KJM சர்வதேச பாடசாலையின் ஏற்பாட்டில், அக்குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (15) கொத்தோட்டுவ நாஸ் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் KJM சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர் குழாமின் அழைப்பின் பேரில் ஐ.டி.எம்.என்.சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி.ஜனகன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்ததோடு, அப்பாடசாலையின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.
இதன்போது அவர் தானும், தனது ஜனனம் அறக்கட்டளையும், கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப எந்தவித எதிர்பார்ப்புமின்றி, முடிந்த உதவிகளை வழங்க காத்திருப்பதாக தெரிவித்தார்.
இப்பாடசாலையானது வெல்லம்பிட்டி, கொலன்னாவை ஆகிய பிரதேசங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த, சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்க முடியாத வசதிவாய்ப்பற்ற நிலையில் உள்ள மாணவர்களுக்கு கை கொடுக்கும் ஒரு சர்வதேச பாடசாலையாக செயற்பட்டு வருகிறது. இதில் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM