“உறுமய” செயற்றிட்டத்தினூடாக மக்களின் காணி உரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்களின் சொத்து மதிப்பை அதிகரிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த சொத்துக்களின் பெறுமதி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்ட “உறுமய” செயற்றிட்டத்தினால் மீண்டும் உயர்ந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மன்னார் மாவட்ட மக்களுக்கு 20 லட்சம் இலவச காணி உறுதிப்பத்திரம் வழங்கும் 'உறுமய' தேசிய செயற்றிட்டத்தின் கீழ் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (16) மன்னார் நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டார்.
இந்த செயற்றிட்டத்தின் கீழ் மன்னார் மாவட்ட மக்களுக்கு 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், 442 காணி உறுதிப்பத்திரங்கள் இன்று ஜனாதிபதியினால் அடையாளமாக வழங்கிவைக்கப்பட்டன.
மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கான பணத்தை வழங்குவது தொடர்பான காசோலைகளையும் ஜனாதிபதி இதன்போது வழங்கினார்.
கடந்த மோசமான காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் அழிவடைந்த விவசாய பயிர்களுக்கு விவசாய காப்புறுதி நட்டஈடு வழங்கப்பட்டதுடன், அப்பகுதி மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் நிதி வழங்கப்பட்டது.
அத்தோடு, மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நினைவுப் பரிசினையும் வழங்கினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
கடந்த மாதம் வடக்குக்கு வந்தபோது மன்னாருக்கு வருவேன் என உறுதியளித்தேன். மன்னாரின் அபிவிருத்திக்கான செயற்றிட்டம் எம்மிடம் உள்ளது.
வடக்கு பிராந்தியத்தில் சுமார் 90,000 குடும்பங்கள் காணி உரிமை கோருகின்றனர். 45,000 குடும்பங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி பத்திரப்பதிவு வழங்கும் திறன் கொண்டது. ஏனைய 45,000 குடும்பங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் மற்றும் வட மாகாண சபைக்கு நான் பணிப்புரை வழங்கியுள்ளேன்.
1935ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் பெதுருதுடுவ தொடக்கம் தௌந்தர துடுவ வரையிலான சகல சமூகங்களுக்கும் காணி உரிமமாக மட்டுமே வழங்கப்பட்டது.
எனவே, இந்த உரிமங்கள் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம். உரிமம் பெற்ற நிலங்களுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயிகள் விவசாயம் செய்தாலும் அவர்களுக்கு நில உரிமை கிடைக்கவில்லை.
சில விவசாயிகள் 85 ஆண்டுகளாக நிலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்டில் காணி உரிமை இல்லாத குடும்பங்கள் சுமார் 20 இலட்சம் உள்ளன. 'உறுமய' அவர்கள் சார்பாக இலவச காணி உரிமைத் திட்டத்தை நடை முறைப்படுத்தியது.
கொவிட் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டது சாமானியர்களே. நாடு திவாலான நிலையில் இருந்து மீண்டு வரும்போது அதன் பலன்களை மக்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக 'உறுமய' செயற்றிட்டம் மீண்டும் மக்களின் சொத்துக்களை பெருக்கி வருகிறது.
ஆசியாவில் எந்த நாட்டிலும் மக்களுக்கு இலவச நில உரிமை வழங்கப்படவில்லை. எனவே உறுமய செயற்றிட்டத்தை நாட்டில் ஒரு புரட்சியாக அறிமுகப்படுத்த முடியும்.
மேல் மாகாணத்தில் உள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமையை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும், பொருளாதார சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.
அப்போது யுத்தம் காரணமாக வடக்கு மக்கள் வீடு, உடைமை, காணிகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வாழ்நாளில் முதல் தடவையாக இலவச காணி உரிமையுடன் சாதாரணமாக வாழும் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளது. உங்களுக்குக் கிடைக்கும் இந்த நிலத்தை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அப்போது நீங்களும் நாடும் பொருளாதார ரீதியாக முன்னேற வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM