பூனேவ கடற்படை முகாமில் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அதிகாரியொருவர் திடீரென படுக்கையிலிருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவத்தின் போது உயிரிழந்த அதிகாரி 37 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.