யாழில் சீன கடலட்டைப் பண்ணை வந்தது நல்லாட்சியில்; அகற்றப்பட்டது எமது ஆட்சியில் - டக்ளஸ்

16 Jun, 2024 | 02:03 PM
image

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்ற நல்லாட்சி அரசாங்கத்தில்தான் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சீன கடலட்டைப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது ஆட்சியில் அதை அகற்றினோம் என்றும் கூறினார்.

நேற்று சனிக்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கில் கடல் அட்டைப் பண்ணைகளால் சூழல் சமநிலை பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடல் அட்டைப் பண்ணைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்ற நல்லாட்சி அரசாங்கத்தில் அமைத்தார்கள். அப்போது சிறிதரனுக்கு தெரியாதா?

எமது ஆட்சியில் அந்தப் பண்ணையை முற்றாக அகற்றியுள்ள நிலையில் தனது அரசியல் சுயலாபத்துக்காக வடக்கில் சீனர்களின் அட்டைப் பண்ணை இருப்பதாக பொய் கூறி வருகிறார்.

தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத் தரப் போகிறோம் எனக் கூறி, தமிழ் தலைமைகள் தமது சுயலாப அரசியலையும் உசுப்பேத்தி அரசியலையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பின்னோக்கிப் போவதற்கு தமிழ் தலைமைகளின் பங்கு பிரதானம். அதை வரலாறுகள் உணர்த்தியுள்ளன. 

இவ்வாறான ஒரு நிலையில் மீனவ சமூகங்கள் மத்தியில் குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கும் தனது வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கும் வடக்கில் சீனர்களின் அட்டை பண்ணை இருப்பதாக வெளிநாட்டில் நின்று சிறிதரன் கூறுகிறார்.  

அவர் வெளிநாட்டிலிருந்துகொண்டு பொய் கூறுகிற நிலையில் அவருக்கு நான் ஒன்றை கூறுகிறேன். வடக்கில் சீனர்களின் அட்டை பண்ணை இருந்தால், காட்டுங்கள். நான் அதனை அகற்றுவதற்கு தயாராக இருக்கிறேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்தொழிலாளர்களின் குரலாக எமது குரல் நாடாளுமன்றில்...

2024-10-15 02:50:34
news-image

யாழில் ஊடக பணியாளர் மீது தாக்குதல்...

2024-10-15 02:44:05
news-image

கடந்த கால அரசுகளைப்போன்று அநுரவும் ஏமாற்றக்கூடாது...

2024-10-15 02:36:49
news-image

யாழில் தேசிய நல்லிணக்கத்திற்கான செயற்றிட்டம் உருவாக்கலுக்கான...

2024-10-15 02:32:31
news-image

அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின்...

2024-10-15 02:23:54
news-image

பிரதமரிடம் 14 வயதுடைய பாடசாலை மாணவி...

2024-10-15 01:56:57
news-image

உலக முடிவு பள்ளத்தாக்கில் கீழே தள்ளி...

2024-10-14 21:42:22
news-image

சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிப்பு;...

2024-10-14 20:21:00
news-image

மட்டக்களப்பில் மோட்டார்சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி...

2024-10-14 20:06:41
news-image

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகனமொன்றினை...

2024-10-14 19:44:07
news-image

ஆயுர்வேத வைத்தியரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை...

2024-10-14 21:39:04
news-image

தமிழரசின் தலைவர், பொதுச்செயலாளர், நிர்வாக செயலாருக்கு...

2024-10-14 21:25:30