ரயிலில் பயணித்த உக்ரைன் யுவதி ரயில் பாதையில் உள்ள சுரங்கத்தில் மோதி படுகாயம்!

16 Jun, 2024 | 11:13 AM
image

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த வெளிநாட்டு யுவதி ஒருவர் ரயில் பாதையில் உள்ள சுரங்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. 

இவ்விபத்தில் 23 வயதுடைய பிலோஸ் அனஸ்தாசியா என்ற உக்ரைன் யுவதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்த இவர் குடும்பத்தாருடன் எல்ல பகுதிக்கு ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ஒஹியா மற்றும் பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள  சுரங்க பாதையில் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த யுவதி அந்த ரயிலில் ஹப்புத்தளை ரயில் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து  தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். குடா மக்களின் வாழ்க்கைத் தரத்தை...

2024-07-12 16:21:39
news-image

எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள...

2024-07-12 16:18:17
news-image

முத்து விநாயகரின் 60 பவுண் நகைகள்...

2024-07-12 15:55:47
news-image

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் வரப்பிரசாதத்தை வழங்கும்...

2024-07-12 15:05:16
news-image

ஜனாதிபதி தேர்தல் ; நிதி சட்டரீதியான...

2024-07-12 15:20:20
news-image

மலேசியாவில் இலங்கையர் உட்பட 88 வெளிநாட்டவர்கள்...

2024-07-12 15:55:03
news-image

யாழ். நெல்லியடியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2024-07-12 15:59:03
news-image

வட்டகொடை தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

2024-07-12 15:46:25
news-image

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

2024-07-12 13:00:30
news-image

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில்...

2024-07-12 13:46:56
news-image

பதுளை - கந்தகெட்டிய பகுதியில் சட்ட...

2024-07-12 13:46:35
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-07-12 12:47:48