இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது - உலக வங்கி

Published By: Digital Desk 7

16 Jun, 2024 | 10:14 AM
image

லங்கை இந்த ஆண்டு முன்வைத்த 2.2 சதவீத மிதமான பொருளாதார விரிவாக்கமானது மீட்சிக்கான அறிகுறிகளை காண்பித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

'உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது ஜனவரியில் இருந்து அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டது. ஜனவரி 2.2 சதவீதம் என்ற மிதமான பொருளாதார விரிவாக்கமானது 0.5 சதவீதம் அதிகரித்து, நேர்மறையான மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. சுற்றுலா மற்றும் பணம் அனுப்புவதில் படிப்படியாக மீண்டு வருவதே இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலைமையானது எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை பொருளாதார ரீதியான தனது வளர்ச்சியை முன்னறிவிப்பதாக உள்ளது.

குறிப்பாக இலங்கை எதிர்வரும் 2026ஆம் ஆண்டளவில் 3 சதவீதமான பொருளாதார வளர்ச்சியைத் தொடும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நம்பிக்கையான கண்ணோட்டம் வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயற்படுத்துவதைச் சார்ந்துள்ளது.

திட்டமிடப்பட்ட நிதி ஒருங்கிணைப்பு முயற்சிகளின் சாத்தியமான எதிர்மறை தாக்கத்தை ஈடு செய்வதற்கு அர்ப்பணிப்பான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது இலக்குகளை அடைவதில் இலங்கைக்கு பின்னடைவான நிலைமைகள் காணப்படாது என்றுள்ளது. நேர்மறையான பக்கத்தில் அமெரிக்காவில் எதிர்பார்த்ததை விட வலுவான பொருளாதார நடவடிக்கைகள் இலங்கைக்கு தலைகீழான ஆபத்து என அறிக்கை அடையாளம் காட்டுகிறது.

இது ஏற்றுமதியை அதிகரித்து வேகமான வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுக்கும். உலகளாவிய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் பணவியல் கொள்கையை தளர்த்துவதற்கு வழிவகுக்கும். இறுதியில் கடன் வாங்கும் செலவுகளைக் குறைத்து ஒட்டுமொத்த பொருளாதாரக் கண்ணோட்டத்தை மேம்படுத்தும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹலிய உட்பட 7 பேருக்கு மீண்டும்...

2024-07-12 17:38:54
news-image

கல்வி மறுசீரமைப்பு மூலம் இந்த நாட்டில்...

2024-07-12 17:08:16
news-image

யாழில் திருநங்கையை கடத்திய மூவருக்கு விளக்கமறியல்!

2024-07-12 17:03:35
news-image

ஆளுமை மிக்க பெண்கள் சமூகத்தில் மலர...

2024-07-12 17:09:04
news-image

யாழ். உணவகத்திற்கு சீல்

2024-07-12 16:57:57
news-image

ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தும் நோக்குடன் சில...

2024-07-12 16:56:54
news-image

புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க...

2024-07-12 16:43:40
news-image

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு -...

2024-07-12 16:43:31
news-image

யாழ். குடா மக்களின் வாழ்க்கைத் தரத்தை...

2024-07-12 16:54:11
news-image

எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள...

2024-07-12 16:18:17
news-image

முத்து விநாயகரின் 60 பவுண் நகைகள்...

2024-07-12 15:55:47
news-image

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் வரப்பிரசாதத்தை வழங்கும்...

2024-07-12 15:05:16