(ஆர்.சேதுராமன்)
தென்கொரியாவில் நடைபெற்ற 'ஆசிய எறிதல் சம்பியன்ஷிப்' ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க புதிய இலங்கை சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் மற்றொரு இலங்கை வீரர் சுமேத ரணசிங்க வெண்கலப்பதக்கம் வென்றதுடன், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் நதீஷா தில்ஹானி வெண்கலப் பதக்கம் வென்றார்.
தென்கொரியாவின் மெக்போ நகரில் நடைபெற்ற 2ஆவது ஆசிய எறிதல் சம்பியன்ஷிப்பில் நேற்று (15) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க பத்திரகே 85.45 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் புதிய இலங்கைச் சாதனையையும், புதிய போட்டிச் சாதனையையும் ருமேஷ் தரங்க படைத்தார்.
2015ஆம் ஆண்டில் தியகமவில் நடைபெற்ற போட்டியொன்றில் சுமேத ரணசிங்க 83.04 மீற்றர் எறிந்தமையே இதுவரை ஈட்டி எறிதலில் இலங்கையின் தேசிய சாதனையாக இருந்தது. அச்சாதனையை 21 வயதான ருமேஷ் தரங்க தென்கொரியாவில் நேற்று முறியடித்துள்ளார்.
எனினும், ஒலிம்பிக் அடைவு மட்டத்தை 5 சென்ரிமீற்றரினால் ருமேஷ் தரங்க அடையத் தவறினார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கு நேரடி தகுதி பெறுவதற்கான அடைவு மட்டம் 85.50 மீற்றர்களாகும்.
அதேவேளை, முந்தைய இலங்கைச் சாதனையாளரான சுமேத ரணசிங்கவும் நேற்று ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி வெண்கலப் பதக்கம் வென்றார். 33 வயதான சுமேத ரணசிங்க இப்போட்டியில் 77.57 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்தார். பாகிஸ்தானின் எம். யசீர் 78.10 மீற்றர் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதேவேளை, பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீராங்கனை நதீஷா தில்ஹானி லேக்கம்கே, 57.94 மீற்றர் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இலங்கை வீராங்கனை டயனா ஹர்சனி 48.46 மீற்றர் எறிந்து 7ஆவது இடத்தைப் பெற்றார்.
இப்போட்டியில் ஜப்பானிய வீராங்கனை மோமனி உவேதா 61.32 மீற்றர் எறிந்து தங்கப் பதக்கத்தையும் சீனாவின் சூ லிங்டான் 60.06 மீற்றர் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM