ரணில் - சஜித் இணைப்பு முயற்சி முழுமையாக முறிவடைந்தது : சிறுபான்மையினக் கட்சியின் தலைவர் தகவல்

Published By: Digital Desk 7

16 Jun, 2024 | 09:56 AM
image

(ஆர்.ராம்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் முழுமையாக முறிவடைந்துள்ளதாக சிறுபான்மையினக் கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இணைப்பு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் சஜித் பிரேமதாச தரப்பில் பங்கேற்றிருந்த அவர் தன்னை முழுமையாக அடையாளப்படுத்துவதற்கு விரும்பாத நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் இணைத்து ஒரே அணியாக்குவதற்காக இருதரப்பிலும் உள்ள முக்கிய உறுப்பினர்களைக் கொண்ட குழுவினருக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டன.

அதேபோன்று குறித்த பேச்சுவார்த்தையின்போது இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விட்டுக்கொடுப்புக்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக உரையாடப்பட்டது.

எனினும், இருதரப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் விட்டுக்கொடுப்புக்களுக்கு தயாரில்லாத நிலையில் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுப்பதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் தொடர்ச்சியாக இணக்கப்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தபோதும் தலைவர்களின் விட்டுக்கொடுப்பற்ற நிலைமை நீடித்தமையால் தொடர்ந்து அந்த விடயத்தினை முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவ்விதமான பேச்சுக்களை முன்னெடுப்பதில் சிக்கலான நிலைமைகளே ஏற்பட்டள்ளது.

ஆகவே, அப்பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதால் பயனில்லை. எனவே அந்த முயற்சி தற்போது கைவிடப்பட்டுள்ளது” என்றார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த சஜித் பிரேமதாசவிடத்தில், ஜனாதிபதி ரணிலுடன் மீண்டும் இணைவு பற்றி கேள்வி எழுப்பபட்டது. அப்போது அவர் “ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களின் பாதுகாவலனாக உள்ளார். அத்துடன் அவர் புதிய லிபரல் வாதத்தினைப் பின்பற்றுகிறார். அது தனவந்தர்களை போசிப்பதாகும். ஆகவே அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் முரண்பட்டுள்ளவருடன் எப்படி ‘டீல்’ போட முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹலிய உட்பட 7 பேருக்கு மீண்டும்...

2024-07-12 17:38:54
news-image

கல்வி மறுசீரமைப்பு மூலம் இந்த நாட்டில்...

2024-07-12 17:08:16
news-image

யாழில் திருநங்கையை கடத்திய மூவருக்கு விளக்கமறியல்!

2024-07-12 17:03:35
news-image

ஆளுமை மிக்க பெண்கள் சமூகத்தில் மலர...

2024-07-12 17:09:04
news-image

யாழ். உணவகத்திற்கு சீல்

2024-07-12 16:57:57
news-image

ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தும் நோக்குடன் சில...

2024-07-12 16:56:54
news-image

புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க...

2024-07-12 16:43:40
news-image

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு -...

2024-07-12 16:43:31
news-image

யாழ். குடா மக்களின் வாழ்க்கைத் தரத்தை...

2024-07-12 16:54:11
news-image

எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள...

2024-07-12 16:18:17
news-image

முத்து விநாயகரின் 60 பவுண் நகைகள்...

2024-07-12 15:55:47
news-image

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் வரப்பிரசாதத்தை வழங்கும்...

2024-07-12 15:05:16