இன்றைய வானிலை

16 Jun, 2024 | 06:08 AM
image

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,  வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை,  ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்ட ங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை  வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

திருகோணமலை  தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 35 ‐ 45 km இலும் கூடிய  வேகத்தில் அடிக்கடி காற்று  வீசக்கூடும் . இக் கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 km ஆக அதிகரித்தும் காணப்படும்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். 

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில்  இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்களில் ஒரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

ஆகையினால்  கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முத்து விநாயகரின் 60 பவுண் நகைகள்...

2024-07-12 15:55:47
news-image

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் வரப்பிரசாதத்தை வழங்கும்...

2024-07-12 15:05:16
news-image

ஜனாதிபதி தேர்தல் ; நிதி சட்டரீதியான...

2024-07-12 15:20:20
news-image

மலேசியாவில் இலங்கையர் உட்பட 88 வெளிநாட்டவர்கள்...

2024-07-12 15:55:03
news-image

யாழ். நெல்லியடியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2024-07-12 15:59:03
news-image

வட்டகொடை தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

2024-07-12 15:46:25
news-image

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

2024-07-12 13:00:30
news-image

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில்...

2024-07-12 13:46:56
news-image

பதுளை - கந்தகெட்டிய பகுதியில் சட்ட...

2024-07-12 13:46:35
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-07-12 12:47:48
news-image

நுவரெலியாவில் பாரவூர்தி மோதி கோர விபத்து...

2024-07-12 13:54:20
news-image

இங்கிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2024-07-12 13:33:59