இந்நாட்களில் சில அரசியல் கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இல்லாமல் பயணிக்க முடியும் என கூறுகின்றன. இந்த முட்டாள்தனமான கதையை நம்பி ஏமாற வேண்டாம் என்று 220 இலட்சம் மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். உலகப் பொருளாதார மற்றும் வர்த்தக முறைகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட சர்வதேச நிதிச் சட்ட அமைப்பை அடிப்படையாக கொண்டவையாகும். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, GAT, WTO போன்றவற்றின் மூலம் உலகப் பொருளாதார முறைமை தாபிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் இல்லாமலேயே இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என யாராவது முட்டாள்தனமான வீரவாதத்தை முன்வைத்தால் அது உலக நகைச்சுவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்களுக்குச் சாதகமான சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், இன்று அவ்வாறான உடன்பாடு எட்டப்படவில்லை. மக்களின் வலிகளுக்கு முன்னுரிமை கொடுத்து IMF ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை. அரசாங்கமும் ஆட்சியாளர்களும் தரையில் கால் பதிக்காமல், வானில் இருந்துகொண்டு கைச்சாத்திட்ட மக்கள் விரோத ஒப்பந்தமே தற்போதைய அரசாங்கம் இணக்கம் கண்டுள்ள ஒப்பந்தம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 237ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா, திவுலப்பிட்டிய, ஹுனுமுல்ல மகா வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும்போது, அவை நாட்டுக்கு பொருத்தமானதாகவும் அமைய வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் மனிதாபிமானமாக இருக்க வேண்டும். மனிதனை பாதுகாத்து வாழ வைப்பதே மனிதனின் உன்னத கடமையாகும். எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் மனிதனை பாதுகாக்கும் ஒன்றாக அமையவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த IMF ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வோம் என IMF பிரதிநிதிகளிடம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டிக்காட்டினார்.
மேலும், IMF இல்லாமலேயே வங்குரோத்தான எமது நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று யாராவது சொன்னால் அது பொய்யும் மாயையுமாகும். எமது நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தேவை. இதில் மக்களுக்கு நன்மையும் நிவாரணமும் தரக்கூடிய இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் அமைச்சர் லலித் அதுலத்முதலி ஏற்றுமதி ஊக்குவிப்பு கிராமங்களை நிறுவும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இது தம்பதெனியவில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும். இதில் பாரிய தொழிற்சாலைகள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் மற்றும் சுயதொழில் செய்பவர்களும் இணைத்துக்கொள்ளப்படுவர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM