தேர்தல் கால பிரச்சாரமாக 13ஆவது திருத்தத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் - நாமல்

15 Jun, 2024 | 06:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் கால பிரசாரமாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பயன்படுத்துவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஜனநாயக ரீதியில் அரசியல் உரிமையை வழங்கினார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வடக்குக்கு சென்று 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக வாக்குறுதி வழங்குகிறார்கள். 

முழு நாட்டுக்கும் இடையூறாக இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பை இல்லாதொழித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. தமிழர்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் எமது ஆட்சியில் தான் அபிவிருத்தியடைந்தது. 

தேர்தல் கால பிரசாரமாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பயன்படுத்துவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 13ஆவது திருத்தம் பற்றி அனைவரும் பேசுகிறார்கள்.

ஆனால் காலவரையறையின்றி, பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் பற்றி எவரும் பேசுவதில்லை. மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் தமிழர்களின் அரசியல் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ் அரசியல் தலைமைகள் அறியவில்லையா?

மாகாண சபைத் தேர்தலை நடத்தவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கட்சி என்ற ரீதியில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் 350 போதை...

2024-07-20 01:00:26
news-image

எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய...

2024-07-20 00:57:33
news-image

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும்...

2024-07-20 00:54:48
news-image

ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் அநுர...

2024-07-20 00:50:48
news-image

தேர்தல் சட்டங்களை மீறுவது மனித உரிமை...

2024-07-19 20:07:45
news-image

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான...

2024-07-19 23:11:07
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை...

2024-07-19 22:57:33
news-image

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால்...

2024-07-19 22:49:56
news-image

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள்...

2024-07-19 22:45:28
news-image

அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள் :...

2024-07-19 19:56:24
news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:35:12
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12