இலஞ்சம் பெற்ற நீர்ப்பாசன திணைக்கள எந்திரியும் அவரின் சாரதியும் விளக்கமறியலில்

Published By: Digital Desk 3

15 Jun, 2024 | 04:55 PM
image

அம்பாறை, அக்கரைப்பற்றில் காணி ஒன்றில் மண் நிரப்புவதற்கு அனுமதி வழங்க 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற நீர்ப்பாசன திணைக்கள எந்திரியும், அவரின் வாகன சாரதியும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  இருவரையும் எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டார்.

காணி ஒன்றுக்கு மண் நிரப்புவதற்கு அனுமதி வழங்க அக்கரைப்பற்று நீர்ப்பாசன திணைக்களத்தில் கடமையாற்றிவரும் எந்திரி இலஞ்சம் கோரியதாக நபரொருவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவதினமான கடந்த புதன்கிழமை (12) அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள நீர்ப்பாசன காரியாலயத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மாறு வேடத்தில் காத்திருந்தனர்.

அங்கு இலஞ்சமாக கோரிய பணத்துடன் முறைப்பாடு செய்த நபர் எந்திரியின் வாகன சாரதியுடன் சென்று 2 இலட்சம் ரூபா பணத்தை எந்திரியிடம் வழங்கியுள்ளார்.  இதன்போது, அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் வாகன சாரதியையும், எந்திரியையும் பணத்துடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது இவர்களை எதிர்வரும் 27 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 118...

2025-03-21 10:10:09
news-image

யாழில் பஸ் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-03-21 10:19:06
news-image

திருகோணமலையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 138...

2025-03-21 10:00:46
news-image

"Clean Sri Lanka" திட்டத்தின் ​நோக்கத்தை...

2025-03-21 09:57:20
news-image

மன்னாரில் 38 வேட்பு மனுக்கள் தாக்கல்...

2025-03-21 09:56:24
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; மற்றுமொரு...

2025-03-21 10:04:12
news-image

அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால்...

2025-03-21 10:01:35
news-image

வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இடச்சென்ற நபர்...

2025-03-21 10:00:27
news-image

வாரியப்பொலவில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து...

2025-03-21 09:47:43
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 வேட்புமனுக்கள் ஏற்பு...

2025-03-21 09:59:18
news-image

கொச்சிக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம்...

2025-03-21 09:54:55
news-image

திருகோணமலை மாவட்டத்தில் 103 அரசியல் கட்சிகளும்...

2025-03-21 09:51:06