நேபாளத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை; தென் ஆபிரிக்காவுக்கு கடைசிப் பந்தில் ஒரு ஓட்ட வெற்றி

15 Jun, 2024 | 04:23 PM
image

(நெவில் அன்தனி)

சென் வின்சென்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்காவுக்கு கடைசிப் பந்துவரை கடும் சவால் விடுத்த நேபாளத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதையாகிப் போனது.

கடைசிவரை மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியில் கடைசி ஓவரை புத்திசாலித்தனமாக வீசிய ஒட்நீல் பார்ட்மன் 6 ஓட்டங்களை மட்டும் கொடுத்து தென் ஆபிரிக்காவுக்கு ஒரு  ஓட்ட  வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

இந்தப் போட்டியில் நேபாளம் தோல்வி அடைந்த போதிலும் சகலதுறைகளிலும் தம்மைவிட பலசாலிகளான தென் ஆபரிக்காவை திக்பிரமிப்பில் ஆழ்த்தி பாராட்டைப் பெற்றது.

இக் குழுவில் நேபாளத்திடம் மாத்திரமே தென் ஆபிரிக்கா கடும் சவாலை எதிர்கொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய தென் ஆபிரிக்காவை நேபாள பந்துவீச்சாளர்களான குஷல் பேர்ட்டல், தீப்பேந்த்ரா சிங் அய்ரீ ஆகிய இருவரும் மிகத் துல்லியமாக பந்துவீசி 115 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர். அவர்கள் இருவரும் வீழ்ந்த 7 விக்கெட்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரே தாக்குப் பிடித்து துடுப்பெடுத்தாடினர்.

116 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் கடைசிவரை போராடி கடைசிப் பந்தில் தோல்வியைத் தழுவியது.

தப்ரெய்ஸ் ஷம்ஸி துல்லியமாக பந்துவீசி 4 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து நேபாளத்துக்கு நெருக்கடியைக் கொடுத்தார்.

ஆனால் கடைசிவரை போராடிய நெபாளத்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

பார்ட்மன் வீசிய கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் குல்சான் ஜாவினால் ஓட்டம் எதுவும் பெறமுடியவில்லை. அடுத்த 2 பந்துகளில் 6 ஓட்டங்களைப் (4, 2) பெற்றார்.

கடைசி 2 பந்துகளில் நேபாளத்தின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 5ஆவது பந்தில் குல்சான் ஜாவினால் ஓட்டம் பெற முடியவில்லை. கடைசிப் பந்தை அடிக்க முடியாமல் போன குல்சான் ஜா, சுப்பர் ஓவருக்கு செல்லலாம் என்ற எண்ணத்தில் ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்தார். ஆனால், அவர் ரன் அவுட் ஆக தென் ஆபிரிக்கா ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்றது.

எண்ணிக்கை சுருக்கம்

தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 115 - 7 விக். (ரீஷா ஹெண்ட்றிக்ஸ் 43, ட்ரைஸ்டன் ஸ்டப்பஸ் 2 ஆ.இ., ஏய்டன் மார்க்ராம் 15, குஷால் பார்ட்டல் 19 - 4 விக்., தீப்பேந்த்ரா சிங் அய்ரீ 21 - 3 விக்.)

நேபாளம் 20 ஓவர்களில் 114 - 7 விக். 9 (ஆசிப் ஷெய்க் 42, அனில் ஷா 27, குஷாலி; பேர்ட்டல் 13, தப்ரெய்ஸ் ஷம்ஸி 19 - 4 விக்.)

ஆட்டநாயகன்: தப்ரெய்ஸ் ஷம்ஸி.

நியூஸிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் தனது முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்ததால் முதல் சுற்றுடன் வெளியேற நேரிட்டுள்ள நியூஸிலாந்து 3ஆவது போட்டியில் ஆறுதல் வெற்றியை ஈட்டியது.

சி குழுவில் இடம்பெறும் நியூஸிலாந்து இன்று நடைபெற்ற உகண்டாவுக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டி 24 ஓவர்களில் முடிவுக்கு வந்தது.

இப் போட்டியில் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் அனைவரும் அற்புதமாக பந்துவீசி தமது அணி இலகுவாக வெற்றிபெற வழிவகுத்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

உகண்டா 18.4 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 40 (கெனெத் வைஸ்வா 11, டிம் சௌதீ 4 - 3 விக்., ட்ரென்ட் போல்ட் 7 - 2 விக்., மிச்செல் சென்ட்னர் 8 - 2 விக்., ரச்சின் ரவிந்த்ரா 9 - 2 விக்.)

நியூஸிலாந்து: 5.2 ஓவர்களில் 41 - 01 விக். (டெவன் கொன்வே 22 ஆ.இ.)

ஆட்டநாயகன்: டிம் சௌதீ

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08
news-image

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப்...

2025-01-19 19:56:12
news-image

துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்;...

2025-01-19 12:39:42
news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53
news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04