ருமேனியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி ; சந்தேக நபர் கைது

15 Jun, 2024 | 04:39 PM
image

ருமேனியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை, கொடகம பிரதேசத்தில் இயங்கி வந்த தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் ருமேனியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மோசடி செய்ததாக கூறப்படும் பணத்தின் பெறுமதி 130 இலட்சம் ரூபா என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமானது முதலில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அனுமதிப்பத்திரத்தைப் பெற்று இயங்கி வந்துள்ள நிலையில் அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடி காலம் முடிவடைந்ததன் பின்னர் அதனை மீளப் புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து சந்தேக நபர் மாத்தறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் வெளிநாடு செல்ல பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் 350 போதை...

2024-07-20 01:00:26
news-image

எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய...

2024-07-20 00:57:33
news-image

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும்...

2024-07-20 00:54:48
news-image

ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் அநுர...

2024-07-20 00:50:48
news-image

தேர்தல் சட்டங்களை மீறுவது மனித உரிமை...

2024-07-19 20:07:45
news-image

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான...

2024-07-19 23:11:07
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை...

2024-07-19 22:57:33
news-image

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால்...

2024-07-19 22:49:56
news-image

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள்...

2024-07-19 22:45:28
news-image

அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள் :...

2024-07-19 19:56:24
news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:35:12
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12