'அரசாங்க பாடசாலைகளிலும், அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளிலும் படித்து உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ் புதல்வன்' எனும் திட்டம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும்'' என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில கல்வித் துறை சார்பில் ஐம்பெரும் விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கு பற்றினார்.
அந்த விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது,
'' காலை உணவு, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் .. என பள்ளி கல்வித்துறையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'புதுமைப்பெண் திட்டம்' பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.
இதனை தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் சந்தித்த மாணவிகள் பலரும் இதனைக் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தனர். அந்த மகிழ்ச்சி மாணவர்களின் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியிருந்தேன். இந்தத் திட்டம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. எனவே புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்மை நாம் 'அப்டேட்' செய்து கொள்வது அவசியம்.
நிதி நெருக்கடி இருந்தாலும், கல்வித்துறையில் பல திட்டங்களை தொடங்குகிறோம் என்றால்... அது மாணவர்களாகிய உங்களுக்காகத்தான். எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களை கேட்டுக் கொள்வது ஒன்றுதான்.. படியுங்கள்! படியுங்கள்! படித்துக் கொண்டே இருங்கள்! உங்கள் கண் முன்னால் 'ஃபுல்ஸ்டாப்' தெரியக்கூடாது. 'கமா' மட்டும்தான் தெரிய வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல் முன்னோக்கி ஓடிக்கொண்டே இருங்கள். வென்று கொண்டே இருங்கள். பிரகாசித்துக் கொண்டே இருங்கள். தமிழகத்திற்கு பெருமை தேடி தாருங்கள்.
கல்விதான் யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. அதிலும் மோசடிகள் நடப்பதால் தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம். இந்த மோசடிக்கு ஒரு நாள் முடிவு கட்டுவோம். நீங்கள் அனைவரும் உலகை வெல்லும் ஆற்றலை பெற்று, பகுத்தறிவோடு செயல்பட ... முதல்வராக மட்டுமல்ல உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவும் வாழ்த்துகிறேன்.'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM