தலைமன்னார்- கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப் பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு

15 Jun, 2024 | 03:43 PM
image

தலைமன்னார்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப் பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு இடம் பெற இருந்த நிலையில் சனிக்கிழமை (15) காலை 10 மணியளவில் ஒன்று கூடிய அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

தலைமன்னார்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கவயன் குடியிருப்பு பகுதியில் சுமார் 160 ஏக்கர் பனை மரங்களைக் கொண்ட குறித்த காணி சட்ட விரோதமாக பிடிக்கப்பட்டுக் குறித்த  காணி அடைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி  இந்தியத் தனியார் கம்பெனி ஒன்றிற்குக் கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த  அப்பகுதி மக்கள்   தெரிவித்துள்ளனர்.

குறித்த காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு, கனிய மணல் அகழ்வு இடம்பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த காணிக்குள் சனிக்கிழமை (15)  காலை வருகை தந்த சிலர் காணியில் கனிய மணல் அகழ்வில் ஈடுபட நடவடிக்கை எடுத்த நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை தெரிவித்தனர்.

குறித்த காணியில் என்ன திட்டம் முன்னெடுக்கப் போகிறார்கள் என்ற விடையம் தமக்குத் தெரியாது என்றும் வெளிப்படையாக எமக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பகுதிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அடாத்தாகப் பிடிக்கப்பட்ட காணி பகுதிக்குச் சென்று அங்குப் பொறுப்பாக இருந்தவருடன் கலந்துரையாடியதுடன்,மக்கள் எதிர்ப்பு தெரி விக்கின்றமையினால் இவ்விடத்தில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாம் என்றும் மக்களுடன் பிரிதொரு தினத்தில் இவ்விடயம் தொடர்பாகக் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த காணியில் நின்ற உரிய நபர் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத நிலையில் அங்கிருந்து வெளியேறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் 350 போதை...

2024-07-20 01:00:26
news-image

எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய...

2024-07-20 00:57:33
news-image

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும்...

2024-07-20 00:54:48
news-image

ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் அநுர...

2024-07-20 00:50:48
news-image

தேர்தல் சட்டங்களை மீறுவது மனித உரிமை...

2024-07-19 20:07:45
news-image

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான...

2024-07-19 23:11:07
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை...

2024-07-19 22:57:33
news-image

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால்...

2024-07-19 22:49:56
news-image

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள்...

2024-07-19 22:45:28
news-image

அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள் :...

2024-07-19 19:56:24
news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:35:12
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12