அரசாங்க வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான எளிய தெய்வீக பரிகாரம்..!?

15 Jun, 2024 | 02:04 PM
image

இன்றைய சூழலில் அரசாங்க பணி என்பது கடினம் என்றாலும், எம்மில் சிலர் அரசாங்கத்தில் தான் பணிபுரிவேன் என்று சபதம் எடுத்து அதற்கான தேர்வுகள், சிறப்பு பயிற்சி முகாம், நேர்காணல்கள் போன்ற முன் தயாரிப்புகளில் ஈடுபட்டிருப்பர். சிலருக்கு அவர்களுடைய ஜாதகத்தின் அமைப்பு படி அரசாங்க பணி வாய்ப்பினை பெற்றிருப்பர். சிலருக்கு அரசாங்க பணி வாய்ப்பிற்கான அமைப்பு இருந்தும்.. தாமதமாகி கொண்டே இருக்கும். இவர்களுக்கு எம்முடைய ஆன்மீகப் பெரியோர்கள் எளிய தெய்வீக பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.

அரசாங்க வேலைக்காக காத்திருக்கும் இளைய தலைமுறையினர் மட்டுமல்லாமல்... இனி அரசாங்க வேலை வாய்ப்பு கிடைக்காது. அதற்கான வயது எல்லை கடந்து விட்டது என்று புலம்புவர்களும்.. அரசாங்க வேலை கிடைக்கவில்லை என்றாலும், அரசாங்கம் தொடர்பான ஒப்பந்த பணிகளை பெறலாம். இதுபோன்ற ஒப்பந்த பணிகளைப் பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்பவர்களும் உண்டு. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டாலும்.. எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்த எளிய தெய்வீக பரிகாரத்தை நம்பிக்கையுடன் மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் ஆலயத்திற்கு சென்று, பெருமாள் நின்ற நிலையில் இருந்தாலும் அல்லது உறங்கும் நிலையில் இருந்தாலும் துளசி மாலையை அணிவித்து வணங்கி எம்முடைய கோரிக்கையை அதாவது அரசாங்க பணி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரின் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனுடன் அந்த ஆலய வளாகத்தில் இருக்கும் ஆஞ்சநேயருக்கும் துளசி மாலையை சாற்றி அரசாங்க வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த கோரிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன் நீங்கள் ஒரு வெள்ளைத்துணியில் அல்லது உங்களுடைய விருப்பமான வண்ணத் துணியில் ஒரு கருப்பு வண்ண பேரீச்சம் பழம்+ ஒரு இனிப்பு லட்டு + ஒரு ரூபாய் நாணயங்கள் 11 என்ற எண்ணிக்கை+ ..‌இவைகளை ஒன்றிணைத்து அதனை முடிச்சிட வேண்டும். இதுபோல் மூன்று எண்ணிக்கையிலான  சிறிய மூட்டைகளை வீட்டிலேயே தயாரித்து, அதனை சனிக்கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு இறைத்தொண்டு செய்யும் ஊழியரிடம் கொடுத்து, பெருமானின் பாதத்தில் வைத்து அர்ச்சித்துக் கொடுங்கள் என வேண்டுகோள் விடுக்க வேண்டும். 

பெருமாளிடம் ஒரு மூட்டையையும், ஆஞ்சநேயரிடம் ஒரு மூட்டையையும், மகாலட்சுமி தாயாரிடம் மற்றொரு முட்டையையும் சமர்ப்பித்து உங்களது அரசாங்க வேலை தொடர்பான கோரிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும். 

அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் இறைவனை வழிபட்ட பிறகு, வெளியே வருகை தந்து அங்கு யாசகம் கேட்கும் பலரில் மூவரை தெரிவு செய்து அவர்களிடம் இந்த சிறிய மூட்டையை வழங்கிட வேண்டும். 

நீங்கள் தருவது தானமல்ல. உங்களது கோரிக்கையை இறைவனிடம் சமர்ப்பித்த பிறகு அதனை நிறைவேற்ற வேண்டும் என கருதி அவர்களிடம் தருகிறீர்கள். 

இதுபோல் மாதத்திற்கு ஒரு சனிக்கிழமையைத் தெரிவு செய்து மூன்று மாதத்திற்கு தொடர்ச்சியாக இந்த தெய்வீக பரிகாரத்தை செய்தால்... அரசாங்க வேலை தொடர்பான பணி நியமன ஆணை கிடைக்கும் அல்லது அது தொடர்பான நிலைகளில் முன்னேற்றம் கிடைக்கும். வேறு சிலருக்கு அரசாங்க ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் கிட்டும். விரைவில் சுப பலனும் கிடைக்கும்.  இந்த தெய்வீக பரிகாரத்தை மேற்கொண்டு பலன் அடைந்தவர்களின் அனுபவபூர்வமான சூட்சமம் இது. 

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சித்தர்களின் ஆசியையும் அருளையும் பெறுவதற்கு எளிய...

2024-07-11 17:36:37
news-image

சந்திராஷ்டமத்தைக் கண்டு பயம் கொள்ளலாமா...?!

2024-07-10 17:50:31
news-image

அன்ன தோஷத்தை அகற்றும் நந்தி பகவான்...

2024-07-09 17:55:38
news-image

கண்களின் கர்மாவை அகற்றும் எளிய பரிகாரம்..!?

2024-07-06 18:20:54
news-image

கும்பத்தின் மீது தேங்காய் வைப்பதன் பின்னணி...

2024-07-05 17:09:04
news-image

பண வரவை அதிகரிப்பதற்கான எளிய வழிமுறைகள்...!?

2024-07-04 16:37:48
news-image

செல்வ வளத்தை அள்ளி வழங்கும் கோதூளி...

2024-07-03 16:50:28
news-image

அயலகத்தில் வாழ்பவர்கள் குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான...

2024-07-02 23:38:29
news-image

உங்களின் செல்வ நிலையை உயர்த்தும் ஆருடா...

2024-07-01 19:31:15
news-image

பண வரவை அதிகரித்துக் கொள்வதற்கான எளிய...

2024-06-29 16:35:07
news-image

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் மாத்ரு தோஷம்..!

2024-06-28 17:55:45
news-image

திருமண தடையை அகற்றும் நெல்லிக்காய் ..!

2024-06-28 13:54:03