புற்றுநோய் கட்டிகளை லேப்ரோஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை மூலம் அகற்ற இயலுமா..?

15 Jun, 2024 | 01:45 PM
image

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டிருக்கிறது. அதிலும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் அந்த நோயின் பாதிப்பு, தன்மை, வீரியம்,  மருத்துவக் கண்காணிப்பு, தொடர் சிகிச்சை... குறித்து முழுமையான விழிப்புணர்வை பெற்றிருக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த தருணத்தில் உணவு குழாய், இரைப்பை, கல்லீரல், கணையம், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் போன்றவற்றில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.. அதனை லேப்ராஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி, முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என சத்திர சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.‌

உணவு குழாய், வயிறு உள்ளிட்ட செரிமான மண்டலத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால்... அவற்றை தொடக்க நிலையிலே கண்டறிந்து விட வேண்டும்.  தொடக்க நிலையில் கண்டறிந்து விட்டால்.. அதனை லேப்ராஸ்கோப்பிக் எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டிகளை முழுமையாக அகற்றி நிவாரணத்தை வழங்கலாம். 

உணவுக் குழாய், கல்லீரல், இரைப்பை, கணையம் .. உள்ளிட்ட செரிமான மண்டலத்தில் உண்டாகும் புற்றுநோய் கட்டிகளை தொடக்க நிலையிலேயே கண்டறியாவிட்டால்... அவை நிணநீர் நாளங்கள் வழியாக உடலில் வேறு உறுப்புகளுக்கும் பரவி அங்குள்ள நிணநீர் முடிச்சுகளை பாதித்து, அங்கும் புற்றுநோயை உண்டாக்கும். இவை மேலும் ரத்த நாளங்கள் வழியாக எலும்பு, மூளை உள்ளிட்ட வேறு பகுதிகளுக்கும் பரவக் கூடும்.

இதனால் புற்றுநோய் செரிமான மண்டலத்தில் ஏற்பட்டு, அதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து விட்டால்... அதனை லேப்ராஸ்கோப்பிக் எனும் சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை தர இயலும். அதே தருணத்தில் செரிமான மண்டலத்தில் உருவான புற்றுநோய் வேறு இடங்களுக்கு பரவி, அதன் நிலை உயர்ந்து விட்டால்... அந்தத் தருணத்தில் லேப்ராஸ்கோப்பிக் சத்திர சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலாது என்பதையும் நோயாளிகள் மனதில் கொள்ள வேண்டும்.

லேப்ராஸ்கோப்பிக் எனும் சாவி துவார சத்திர சிகிச்சை மூலம் புற்று நோய் கட்டியை அகற்றுவதால்.. குணமடையும் கால அவகாசம் குறைவாகவும், விரைவாகவும் இருக்கும். சத்திர சிகிச்சையின் காரணமாக உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்.. சீரடைந்து உடல் நிலை இயல்பான தன்மைக்கு மீட்டெடுக்க குறைவான காலகட்டமே போதுமானது. மேலும் லேப்ராஸ்கோப்பிக் கருவியை புற்றுநோய் தாக்கி இருக்கும் பகுதிக்குள் செலுத்தும் போது, அப்பகுதி பத்து மடங்கு பெரிதாக காண்பிக்கப்படுவதால் துல்லியமாகவும், முழுமையானதாகவும் புற்றுநோய் கட்டியை அகற்ற இயலும். புற்றுநோய் பரவ காரணமாக இருக்கும் நிணநீர் நாளங்களையும் லேப்ராஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை மூலம் முழுமையாக அகற்ற இயலும். மேலும் இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு நுரையீரலின் இயங்கு திறன் மீண்டும் விரைவாக இயல்புத் தன்மைக்கு திரும்பும். வலியும் குறைவாகவே இருக்கும். தழும்பும் மிக சிறிய அளவிலேயே இருக்கும்.  தற்போது இந்த லேப்ராஸ்கோப்பிக் சத்திர ரசிகிச்சை ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதால் துல்லியமான சத்திர சிகிச்சையை உறுதிப்படுத்துகிறது. நோயாளிகளுக்கும் முழுமையான நிவாரணம் கிடைக்கிறது.

வைத்தியர் ரமேஷ்

தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஹைபோகால்சீமியா எனும்...

2025-02-19 17:39:18
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் எனும் தசை பாதிப்பிற்குரிய...

2025-02-18 17:33:45
news-image

சிறுநீர் குழாயில் பாதிப்பும் நவீன சத்திர...

2025-02-17 17:34:44
news-image

மொரீசியஸில் புதிய நவீன புற்றுநோய் மருத்துவமனையில்...

2025-02-17 16:08:00
news-image

பியோஜெனிக் கிரானுலோமா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-02-15 18:38:50
news-image

நாக்டூரல் மஸுல் கிராம்ப்ஸ் எனும் இரவு...

2025-02-13 15:44:09
news-image

ஸ்பொண்டிலோலிஸ்டெஸிஸ் எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-02-12 17:05:03
news-image

14,0000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களுக்கு...

2025-02-12 14:15:17
news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22