நடிகர் பிரஜின் நடிக்கும் 'ராஞ்சா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

15 Jun, 2024 | 01:29 PM
image

தமிழ் திரையுலகில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை எட்டுவதற்காக கடுமையாக போராடிவரும் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ராஞ்சா' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ராஞ்சா' எனும் திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஆர். ஹரி இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. சாம்பசிவன் மற்றும் சி. வி. குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், அதனையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right