தமிழ் மொழியை சிதைக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' பட பாடல்

15 Jun, 2024 | 01:35 PM
image

இசை முக்கியமா..? பாடல் வரிகள் முக்கியமா..? என்ற சர்ச்சைக்குரிய விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தீரா மழை..' எனும் பாடலை பாடிய பாடகரும், இசையமைப்பாளருமான சௌரவ் ராய்.. தமிழ் மொழி சொற்களை உச்சரிக்க தெரியாமல், தவறாக உச்சரித்து மொழிக்குரிய இனிமையையும், தனித்தன்மையையும் சேதப்படுத்தி இருக்கிறார் என இசை ரசிகர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள். இதனால் இந்தப் பாடல் ரசிகர்களை சென்றடையுமா..! என்ற கேள்விக்குறியை எழுப்பி இருக்கிறது.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, சத்யராஜ், மேகா ஆகாஷ், டாலி தனஞ்ஜெயா, முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன், 'தலைவாசல்' விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  அச்சு ராஜாமணி - விஜய் அண்டனி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல் போஹ்ரா- பி. பிரதீப் -பங்கஜ் போஹ்ரா - லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 'வராது வந்த வான் மழை..'  எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியை வந்தனா மாஷான் எழுத,  இசையமைப்பாளரும், பாடகருமான சௌரவ் ராய் பாடியிருக்கிறார்.

மெல்லிசை பாணியில் அமைந்திருக்கும் இந்தப் பாடலின் பல்லவியில் இடம்பெறும் 'சதா சதா வதைக்குதே.. மனம் பதைக்குதே..' என்ற  வரியை பாடும் போது பாடகர் சொற்களின் தனித்தன்மையை தவறாக பாடி சிதைத்திருக்கிறார்.‌ அதேபோல் அதே பாடலில் 'பயந்து ஒளிந்து ஓடினால்.. பயங்கள் இல்லையே..' என்ற வரியை பாடும்போதும் பாடகர் சொற்களின் தனித்தன்மையை தவறாக பாடி சிதைத்திருக்கிறார்.

இளம் கலைஞர்களின் திறமைகளைப் போற்றி வணங்கும் ரசிகர்கள்... அவர்கள் மொழியை தவறாகவோ சேதப்படுத்தும் வகையிலோ.. கையாளும் போதோ.. அதற்குரிய எச்சரிக்கையை வழங்க வேண்டிய பாடலாசிரியர் வந்தனா மாஷான், இசையமைப்பாளர்கள் விஜய் அண்டனி -அச்சு ராஜா மணி,  ஒளிப்பதிவாளராக மட்டுமில்லாமல் கவிஞராகவும் இருக்கும் இயக்குநர் விஜய் மில்டன்... ஆகியோர் இதனை எப்படி அனுமதித்தனர்? என்பதுதான் இசை ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் சூரி வெளியிட்ட 'டெலிவரி பாய்'...

2025-01-16 17:05:13
news-image

பார்த்திபன் வெளியிட்ட ' புரவியாட்டம் '...

2025-01-16 17:04:38
news-image

நடிகர் மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின்...

2025-01-16 17:03:46
news-image

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த விஜய் சேதுபதி...

2025-01-16 16:49:05
news-image

நடிகர் 'கெத்து' தினேஷ் நடிக்கும் 'கருப்பு...

2025-01-16 17:41:35
news-image

காதலர் தினத்தன்று வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின்...

2025-01-16 16:45:44
news-image

கத்திக்குத்து தாக்குதல் ; நடிகர் சயிப்...

2025-01-16 16:49:31
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'காதி' படத்தின்...

2025-01-16 15:16:23
news-image

நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்...

2025-01-16 11:06:42
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் பாத்திமா' படத்தின்...

2025-01-15 18:23:14
news-image

கவனம் ஈர்க்கும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'...

2025-01-15 18:18:10
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2'

2025-01-15 18:13:55