விமல் - கருணாஸ் இணையும் 'போகுமிடம் வெகு தூரமில்லை' பட பாடலின் காணொளி வெளியீடு!

15 Jun, 2024 | 01:13 PM
image

தமிழ் திரையுலகின் தனித்துவமான நடிப்பிற்காக புகழப்படும் நடிகர்கள் விமல் - கருணாஸ் இருவரும் கதையின் நாயகர்களாக இணைந்து நடித்திருக்கும் 'போகுமிடம் வெகுதூரமில்லை' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'புல்லட் வண்டியிலே..' எனத் தொடங்கும் பாடலுக்கான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மைக்கேல் கே. ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போகுமிடம் வெகுதூரமில்லை' எனும் திரைப்படத்தில் விமல், கருணாஸ், தீபா ஷங்கர், பவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான இந்தத் திரைப்படத்தை ஷார்க் 9 பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவா கிலாரி தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ஒரு பாடல் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'புல்லட்டு வண்டியிலே ..' எனத் தொடங்கும் பாடலுக்கான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் ஏகாதசி எழுத, பின்னணி பாடகர்கள் மதிச்சியம் பாலா +மகாலிங்கம் +குரு அய்யாதுரை+ லதா+ ஷிவானி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மரணம் நடைபெற்ற இடத்தில் கிராமிய கலைஞர்கள் பாடும் ஒப்பாரி பாடலைப் போல் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடல் துள்ளலிசையில் அமையப்பெற்றிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இந்தப் பாடல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தர்மதுரை' படத்தில் இடம்பெற்ற பாடலை நினைவுபடுத்துவதாலும்... காட்சிகள் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருப்பதால் இந்த பாடலின் காணொளியை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜுன் தாஸுடன் முதன்முறையாக இணையும் அதிதி...

2024-07-11 21:59:09
news-image

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'...

2024-07-11 18:07:30
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி...

2024-07-11 17:54:39
news-image

வெளியீட்டு திகதியை அறிவித்த விஜய் ஆண்டனியின்...

2024-07-11 18:06:45
news-image

சுசீந்திரன் இயக்கும் '2 K லவ்...

2024-07-11 18:06:33
news-image

அமீர் - சமுத்திரக்கனி தொடங்கி வைத்த...

2024-07-11 18:06:14
news-image

வெங்கட் பிரபு வழங்கும் 'நண்பன் ஒருவன்...

2024-07-11 18:06:00
news-image

யூரோ 2024 :16 வயதில் கோல்...

2024-07-11 12:47:35
news-image

விஜய் சேதுபதி - சூரி இணைந்து...

2024-07-10 17:26:26
news-image

ஆகஸ்டில் வெளியாகும் திரிஷாவின் முதல் இணைய...

2024-07-10 17:41:46
news-image

கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார்...

2024-07-10 17:25:00
news-image

இருட்டு அறையில் முரட்டு தேவதையாக மிரட்டும்...

2024-07-10 16:48:46