செங்கடல் பகுதியில் மீண்டும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் மீண்டும் அதிகரிப்பு- கிரேக்க கப்பல் மீது தாக்குதல்

Published By: Rajeeban

15 Jun, 2024 | 12:09 PM
image

செங்கடல் பகுதியில் கிரேக்கத்திற்கு சொந்தமான வணிக கப்பல் மீது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தொடர்ந்து அந்த கப்பலில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் கப்பல் கைவிடப்பட்ட நிலையில் மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லைபீரிய கொடியுடன் நிலக்கரி ஏற்றிவந்த கப்பலை சேர்ந்த ஒருவர் காணாமல்போயுள்ளார்.

யேமன் துறைமுகமாக ஹொடெய்டாவிற்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக கப்பலிற்குள் பெருமளவு நீர் புகுந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இயந்திர அறை பயன்படுத்த முடியாதநிலைக்கு காணப்பட்டதால் கப்பலை செலுத்த முடியாத நிலையேற்பட்டது.

டியுட்டர் என்ற  இந்த கப்பலின் பணியாளர்கள் பிலிப்பைன்சை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல்போனவர் இயந்திர அறையில் சிக்குண்டிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின்  தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் இந்த கப்பல் மீதான தாக்குதலிற்கும் வேர்பெனா என்ற மற்றுமொரு கப்பல் மீதான தாக்குதலிற்கும் உரிமை கோரியுள்ளனர்.

அவர்களின் தாக்குதல் காரணமாக மேலும் இரு கப்பல்கள் சேதமடைந்துள்ளன அவர்களின் தாக்குதல் திறன் அதிகரித்துள்ளது என பிரிட்டனின் பாதுகாப்பு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

காசா யுத்தத்தில் பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் கடந்த நவம்பர் முதல் செங்கடல் பகுதியில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் பயன்படுத்தி கப்பல்களை தாக்கி வருகின்றனர்.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் இதுவரை ஒரு கப்பலை மூழ்கடித்துள்ளதுடன் ஒரு கப்பலை கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலைமை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என சர்வதேச கடல்சார் அமைப்பின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09
news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51