நாராஹேன்பிட்ட சிறப்பு பொருளாதார நிலையத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (02) மதியம் குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீ பரவியுள்ள பிரதேசத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தீ பரவல் ஏற்பட்டதற்கான காரணம் வெளியாகவில்லையெனவும், இதுதொடர்பான சேத விபரங்கள்  மற்றும் தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.