சமரி அத்தபத்தவுக்கு மீண்டும் ஐசிசி விருது !

15 Jun, 2024 | 10:36 AM
image

(என்.வீ.ஏ.)

மிகவும் பெறுமதிவாய்ந்த ஐசிசி மாதத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்னைக்கான விருதை இலங்கை மகளிர கிரிக்கெட் அணித் தலைவி  சமரி   அத்தபத்து இரண்டாவது தடவையாக வென்று வரலாறு படைத்துள்ளார்.

அதிசிறந்த வீராங்கனைக்கான ஐசிசி மே மாத விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அணித் தலைவி கெத்தரின் ப்றைஸ், இங்கிலாந்தின் சொஃபி எக்லெஸ்டோன் ஆகியோரின் பலத்த சவாலுக்கு மத்தியில் சமரி அத்தபத்தவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இதே விருதை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சமரி அத்தபத்து வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்த வீராங்கனை என்ற பெருமையை சமரி அத்தபத்து பெற்றுள்ளார்.

அபு தாபியில் கடந்த மாதம் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 226 ஓட்டங்களைக் குவித்து, 34 வயதான சகலதுறை வீராங்கனை சமரி அத்தபத்து முதிலிடத்தில் இருந்தார். அத்துடன் 7 விக்கெட்களையும் அவர் கைப்பற்றியிருந்தார்.   

சுற்றுப் போட்டியின் ஆரம்பத்தில் சுமாரான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சமரி அத்தபத்து, பின்னர் சிறப்பாக விளையாடியதடன் இறுதிப் போட்டியில் சதம் குவித்து இலங்கையை தோல்வி அடையாத சம்பியனாக்கியிருந்தார்.

அதன் மூலம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை இலங்கை பெற்றது.

மே மாதத்தில் தான் விளையாடிய நான்கு போட்டிகளில் அத்தபத்து 37.75 என்ற சராசரியுடன் 151 ஓட்டங்களை மொத்தமாக பெற்றதுடன் 6 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.

'ஐசிசியின் இந்த மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை மீண்டும் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும்  அடைகிறேன். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் நான் வெளிப்படுத்தி வரும் ஆற்றல்களுக்கு கிடைத்துவரும் தொடர்ச்சியான அங்கீகாரம் எனது ஆற்றலை மேலும் மேம்படுத்தவும், நல்ல செயல்திறனைத் தொடரவும் எனக்கு உந்துசக்தியாக அமைகிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்' என சமரி அத்தபத்து கூறியுள்ளார்.

'கேத்தரின் (பிரைஸ்), சொஃபி (எக்லெஸ்டோன்) ஆகிய இருவருமே மிகத் திறமையான வீராங்கனைகள் என்பதை நிரூபித்துவந்துள்ளனர் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அத்துடன் அவர்களை வாழ்த்துகிறேன். மேலும் எனது இந்த முயற்சியில் எனக்கு ஆதரவளித்துவரும் எனது அணியினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்' என அவர் மேலும் கூறினார்.  

      

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08