மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் பெண்ணை துப்பாக்கியால் தாக்கி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற நபர் 3 மணித்தியாலயங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி பகுதியில் வீடொன்றினுள் புகுந்த நபரொருவர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு பெண்ணொருவரின் தலையில் துப்பாக்கியால் தாக்கி 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அத்துடன், காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடவியல் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பெண்ணின் வீட்டிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்று 3 மணித்தியாலங்களில் கொள்ளையடித்த நபர் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் காத்தான்குடியைச் சேர்ந்த 43 வயதுடையவராவார்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM