முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாமவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவை பொலிஸார் நாடவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் உத்திக பிரேமரத்னவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதோடு, புதிய அணுகுமுறையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடிகர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருடன் இணைந்து திட்டமிட்ட வகையில் இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சஞ்சீவ மஹாநாம என்ற சந்தேகத்துக்குரிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், பொலிஸாருக்கு தெரியப்படுத்தி உரிய அனுமதி பெற்று வெளிநாடு செல்லவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பாராளுமன்ற உறுப்பினரும் நன்கு நெருக்கமானவர்கள் என்பதாலேயே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாகத் தோன்றுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததுடன், இது தொடர்பில் தனியான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
சந்தேக நபரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று தனது துப்பாக்கியை மற்றொருவரிடம் ஒப்படைத்து பணியிடத்துக்கு அனுப்பியதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ, இது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாம, மலேசியாவுக்கு சென்றுள்ளதாகவும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் வெளிநாடு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்தது, ஆனால் பாராளுமன்ற உறுப்பினருக்கு காயம் ஏற்படவில்லை.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM