நீர்கொழும்பு கடலில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு

14 Jun, 2024 | 10:16 PM
image

நீர்கொழும்பு கடலில் இன்று வெள்ளிக்கிழமை (14) மாலை  ஐந்து மணியளவில் நீர்கொழும்பு குடாப்பாடு மீனவர் துறைமுகத்திற்கு அருகில் கடலில் நீராடச் சென்ற மாணவர்கள்  இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.   

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களே உயிரிழந்தவர்களாவர்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பகல் ஐந்து மாணவர்கள் குடாப்பாடு கடலில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் இருவர் கடலில் மூழ்கியுள்ளனர்.

ஏனையவர்கள் அந்த இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில் பிரதேசவாசிகள் கடும் முயற்சி செய்து மூவரை காப்பாற்றி உள்ள நிலையில் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

நீர்கொழும்பு  கடற்கரை தெருவை சேர்ந்த யோகநாதன் நிதிஷ் (17), அஸரப்பா வீதியை சேர்ந்த ராஜதுரை அரவிந்தன் (17) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

இறந்தவர்களின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளை...

2024-07-25 04:21:24
news-image

பொலிஸ்மா அதிபரின் பதவி நிறுத்தம் தேர்தலைப்...

2024-07-25 04:17:39
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர்கள் ஆசிரியர்கள்...

2024-07-25 04:13:36
news-image

விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள அமைச்சர் விஜேதாச?

2024-07-25 03:59:44
news-image

ஓய்வூதியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம்...

2024-07-24 20:55:57
news-image

கிழக்கில் கடந்த 10 வருடங்களாக ஆசிரிய...

2024-07-24 17:26:51
news-image

சடலங்களை தகனம் செய்தமைக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக்...

2024-07-24 16:03:08
news-image

கொவிட்டில் மரணித்தவர்களை தகனம் செய்வதற்கு உத்தரவிட்டவர்களை...

2024-07-24 17:32:14
news-image

ஜனாதிபதி தேர்தல் கட்டுப்பணத்தை 30 இலட்சமாக...

2024-07-24 15:56:13
news-image

தபால் மூல வாக்களிப்புக்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதியளிக்க...

2024-07-24 17:34:51
news-image

இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட 11 அபிவிருத்தித்திட்டங்களை மீள...

2024-07-24 19:14:15
news-image

முஸ்லிம்களின் காலில் விழுந்து மன்றாடினாலும் மன்னிக்க...

2024-07-24 17:28:35