வடக்கின் 3 மாவட்டங்களில் 6 இடங்களில் கொள்ளை : மூவர் கைது: பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் மீட்பு !

14 Jun, 2024 | 07:26 PM
image

வடக்கின் மூன்று மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 பேர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், தொலைபேசி ஒன்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்டிருந்தன.

 இது தொடர்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் பாதிக்கப்பட்டவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான மூவரை கைது செய்தனர் . 

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வடக்கின் மூன்று மாவட்டங்களில் 6 இடங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், புளியங்குளத்தில் பிறிதொரு வீடு உடைத்து கிரேண்டர், லெப்டொப், லைற் உள்ளிட்ட பொருட்களும் குறித்த சந்தேக நபர்களால் திருடப்பட்டுள்ளன.

மேலும், மன்னார் பகுதியில் வீடு உடைத்து 5 இலட்சம் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதுடன், மன்னார், பேசாலைப் பகுதியில் 3 வயது பிள்ளை அணிந்திருந்த ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சங்கிலியும் அறுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றும் குறித்த நபர்களால் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட நகைகள் வவுனியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் அடைவு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய திருடப்பட்ட பொருட்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த 6 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவரும், வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரும், யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வின் மூலமே தமிழர்களின்...

2025-01-18 22:11:09
news-image

ராஜபக்ஷக்கள் நாட்டை சீன கடன்பொறிக்குள் தள்ளவில்லை...

2025-01-18 21:56:39
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை ஏதேனுமொரு பரிமாணத்தில்...

2025-01-18 21:52:14
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கதிரை சின்னத்தில் கூட்டணியாக...

2025-01-18 15:54:49
news-image

இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் நிபந்தனையற்ற நண்பனாக...

2025-01-18 18:19:10
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -...

2025-01-18 21:51:31
news-image

நாடெங்கும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கம்; பொதுமக்கள்...

2025-01-18 17:06:52
news-image

ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன்...

2025-01-18 21:40:27
news-image

மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க...

2025-01-18 15:55:31
news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19