கம்பஹா வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம் !

14 Jun, 2024 | 08:22 PM
image

கம்பஹா நகரை சுற்றியுள்ள நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது. கம்பஹா நகரை பாதிக்கும் வெள்ள அபாயத்தைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

இதன் கீழ் கம்பஹா நகரின் மையப்பகுதியில் உள்ள பிரதான கால்வாய் மற்றும் குந்திவில கால்வாயில் சிக்கியுள்ள கழிவுகள், ஜப்பானிய ஜபரா மற்றும் பாசிகளை அகற்றும் பணியை இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தற்போது ஆரம்பித்துள்ளது.   

கம்பஹா குந்திவில கால்வாய்க்கு அருகில் பல இடங்களில் இந்த கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

அண்மையில் பெய்த கடும் மழையினால் கம்பஹா நகரம் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததுடன், மீண்டும் அவ்வாறான அனர்த்தம் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க காணி கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.  

இதன்படி, அமைச்சின் செயலாளர் எஸ். சத்யானந்த தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், நகரைச் சுற்றியுள்ள கால்வாய்கள் மற்றும் நீர் பிடிப்புப் பகுதிகளில் தேங்கிய கழிவுகள் மற்றும் அண்மையிலுள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் தற்காலிக நிர்மாணங்கள் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது. இதற்கு பதிலாக காணி அபிவிருத்திக் கழகம் மூன்று அம்ச வேலைத்திட்டத்தை முன்வைத்தது. இதில் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால முன்மொழிவுகள் அடங்கும். அந்த முன்மொழிவுகளின் குறுகிய கால தீர்வு நடவடிக்கை இன்று தொடங்கப்பட்டது.

அதன்படி கம்பஹா நகரை கடந்து செல்லும் பிரதான கால்வாயில் தேங்கியிருந்த பல்வேறு கழிவுகள் மற்றும் மரத்தடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக கம்பஹாவைச் சுற்றியுள்ள கால்வாய் சுத்தப்படுத்தும் திட்டம் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. கால்வாய் சுத்திகரிப்பு நடவடிக்கையை தொடருமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

கால்வாய்களை துப்பரவு செய்யும் நிகழ்வை அவதானிப்பதற்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் குணவர்தன, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் திஸ்ஸ குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் 350 போதை...

2024-07-20 01:00:26
news-image

எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய...

2024-07-20 00:57:33
news-image

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும்...

2024-07-20 00:54:48
news-image

ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் அநுர...

2024-07-20 00:50:48
news-image

தேர்தல் சட்டங்களை மீறுவது மனித உரிமை...

2024-07-19 20:07:45
news-image

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான...

2024-07-19 23:11:07
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை...

2024-07-19 22:57:33
news-image

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால்...

2024-07-19 22:49:56
news-image

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள்...

2024-07-19 22:45:28
news-image

அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள் :...

2024-07-19 19:56:24
news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:35:12
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12