தண்டுவடத்தில் ஏற்படும் காசநோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

14 Jun, 2024 | 04:56 PM
image

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் காசநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. எம்மில் பலரும் காச நோய் என்பது நுரையீரலை தாக்கும் நோய் என்றுதான் அறிந்திருப்போம். ஆனால் காச நோய் எம்முடைய தண்டுவட பகுதியையும் பாதிக்கும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வை பெற்று, அறிகுறிகள் தெரிந்தவுடன் வைத்திய நிபுணர்களை சந்தித்து அதற்குரிய சிகிச்சைகளை  பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

ஒரு வகையினதான பாக்டீரியா தொற்றால் ஏற்படும் காசநோய் பாதிப்பு நுரையீரலை மட்டுமல்ல தண்டுவடம் மற்றும் மூளையையும் பாதிக்கும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். காச நோய் தண்டுவடத்தைப் பாதிக்கும் போது அங்குள்ள எலும்புகளை தாக்கி அழித்து, கை அல்லது கால் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும்.

எம்மில் பலருக்கு எலும்பில் ஏற்படும் தேய்மானத்தின் காரணமாக முதுகு வலி ஏற்படும். இவை பெரும்பாலும் நாம் பணியாற்றும் நேரங்களில் உண்டாகும். உறங்கும்போது முதுகு வலி என்பது குறையும். ஆனால் தண்டுவடத்தில் காசநோய் பாதிப்பு ஏற்பட்டால் உறங்கும் போது முதுகு வலி அதிகமாக இருக்கும். இதனால் உறக்கம் கெடும்.‌ இதனுடன் பசியின்மை, திடீர் உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகளும் உண்டாகும்.

இத்தகைய அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு வைத்தியர்கள் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பர். பரிசோதனைகளின் முடிவுகளின் படி உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். இந்தத் தருணத்தில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கு முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். மேலும் தண்டுவடத்தில் காசநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவை தொடக்க நிலையில் இருந்தாலும் கூட தொடர்ச்சியாக ஓராண்டு வரை மருந்தியல் சிகிச்சையை தொடர வேண்டியதிருக்கும்.

இந்த தருணத்தில் மருத்துவர்கள் அறிவுறுத்தும் வாழ்க்கை நடைமுறை, உணவு கட்டுப்பாடு, உணவு முறை, உடற்பயிற்சி, இயன்முறை பயிற்சி ஆகியவற்றை உறுதியாக பின்பற்றினால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்.‌ வெகு சிலருக்கு மட்டுமே மருந்தியல் சிகிச்சை முழுமையான பலனை தராத போது அவர்களுக்கு வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பு தன்மையை உறுதிப்படுத்திய பின்பு அதனைத் தொடர்ந்து சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணத்தை வழங்குவர்.‌

வைத்தியர் மதுசூதன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59
news-image

அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய்...

2024-07-05 17:10:12
news-image

நான்ஆல்கஹாலிக் ஸ்டீடோஹெபடைடிஸ் எனும் கொழுப்பு கல்லீரல்...

2024-07-05 00:50:06
news-image

ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை...

2024-07-03 15:25:15
news-image

பிராங்கியாடிஸிஸ் எனும் மூச்சு குழாய் தளர்வு...

2024-07-02 23:38:44
news-image

உடல் எடை குறைப்பதற்கான நவீன சிகிச்சை

2024-07-01 19:29:59
news-image

மருந்துகளின் பக்க விளைவுப் பாதிப்புக்கும் சிகிச்சை

2024-06-29 16:15:38
news-image

ஹைட்ரோகெபாலஸ் எனும் மூளையில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-06-28 17:55:25
news-image

குருதியில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்த...

2024-06-28 14:20:41
news-image

குமட்டல் உணர்வு, வாந்திக்கு சிகிச்சை எடுக்க...

2024-06-26 17:45:16