‘பயமறியா பிரம்மை’ படத்தில் நீளமான காட்சிகள் அதிகம் - குரு சோமசுந்தரம்

Published By: Digital Desk 7

14 Jun, 2024 | 04:57 PM
image

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பயமறியா பிரம்மை' எனும் திரைப்படத்தில், சிங்கிள் டேக்கில் படமாக்கப்பட்ட நீளமான காட்சிகள் அதிகம் என்று அப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் குரு சோமசுந்தரம் தெரிவித்திருக்கிறார்.  

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பயமறியா பிரம்மை' எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜோன் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நந்தா- வி. பிரவீண் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.‌ கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை 69 எம் எம் ஃபிலிம் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் மற்றும் ராகுல் கபாலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.  அந்த தருணத்தில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள் நந்தா மற்றும் பிரவீன், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜேக் ராபின்சன், வினோத் சாகர், ஜேடி, குரு சோமசுந்தரம், நடிகை சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் பங்குபற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் ராகுல் கபாலி பேசுகையில்,“ இந்தத் திரைப்படம் இனிமையான சுவாரசியமான அனுபவத்தை உங்களுக்கு தரும். தற்போது படமாளிகையில் வெளியாகும் படங்களில் இந்த திரைப்படம் எங்களின் புதிய முயற்சியை உங்களுக்கு உணர்த்தும்.” என்றார். 

நடிகர் குரு சோமசுந்தரம் பேசுகையில், ''   மூணாறில் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது, ராகுல் கபாலி தொடர்பு கொண்டு பேசினார். 'பயமறியா பிரம்மை' படத்தில் ஜெகதீஷ் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நான் படப்பிடிப்பு நிறைவு செய்தவுடன் சென்னைக்கு வந்து கதை கேட்கிறேன் என்று சொன்னேன். அவர்கள் உடனடியாக மூணாறுக்கு வந்து என்னிடம் கதையை சொன்னார்கள்.‌ கதையை கேட்டதும் பிடித்திருந்தது. அதன் பிறகு திரைக்கதையை வாசிக்க கேட்டேன். முழுவதும் வாசித்த பிறகு, இயக்குநரை தொடர்பு கொண்டு, 'வித்தியாசமாக இருக்கிறது. இதனை வாசிக்கும் போதே கையெல்லாம் ரத்தமாகிவிட்டதே..' என்றேன். அப்போது இயக்குநர் 'ரத்தம் திரைக்கதையில் தான் இருக்கும். ஆனால் திரையில் இருக்காது' என்றார். 

இந்தத் திரைப்படத்தில் நீளமான காட்சிகள் அதிகம் இருக்கிறது. அதாவது சிங்கிள் டேக்கில் நீளமான காட்சிகளை படமாக்குவார்கள். இந்தப் படத்தில் இதுபோன்ற நீளமான காட்சிகள் இருக்கிறது. இதுபோன்ற காட்சிகள் பார்வையாளர்களை வசப்படுத்தும். நடிகர்களின் சிறந்த நடிப்பு - அழுத்தமான, அர்த்தமுள்ள வசனம்- ஒளிப்பதிவு - காட்சியின் மனநிலை-  ஆகியவை ஒன்றிணைந்து சிறப்பாக அமைந்து விட்டால் இதுபோன்ற நீளமான காட்சிகளை மக்கள் தொடர்ச்சியாக கண்டு ரசிப்பார்கள்.

எப்படி தொலைக்காட்சிகளில் நகைச்சுவை காட்சிகளை கண்டு ரசிக்கிறார்களோ எப்படி பாடல் காட்சிகளை கண்டு ரசிக்கிறார்களோ எப்படி சில உணர்வுபூர்வமான காட்சிகளை கண்டு ரசிக்கிறார்களோ அதே போல் இந்த நீளமான சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட்ட காட்சிகளையும் மக்கள் தொடர்ச்சியாக பார்த்து ரசிப்பார்கள்.‌ 

இயக்குநர் ராகுல் கபாலி, ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குநர் என அனைவரும் ஒன்றிணைந்து இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இவர்களைப் போன்ற ஆற்றல் கொண்ட புதிய இளைய தலைமுறை படைப்பாளிகளுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.” என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜுன் தாஸுடன் முதன்முறையாக இணையும் அதிதி...

2024-07-11 21:59:09
news-image

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'...

2024-07-11 18:07:30
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி...

2024-07-11 17:54:39
news-image

வெளியீட்டு திகதியை அறிவித்த விஜய் ஆண்டனியின்...

2024-07-11 18:06:45
news-image

சுசீந்திரன் இயக்கும் '2 K லவ்...

2024-07-11 18:06:33
news-image

அமீர் - சமுத்திரக்கனி தொடங்கி வைத்த...

2024-07-11 18:06:14
news-image

வெங்கட் பிரபு வழங்கும் 'நண்பன் ஒருவன்...

2024-07-11 18:06:00
news-image

யூரோ 2024 :16 வயதில் கோல்...

2024-07-11 12:47:35
news-image

விஜய் சேதுபதி - சூரி இணைந்து...

2024-07-10 17:26:26
news-image

ஆகஸ்டில் வெளியாகும் திரிஷாவின் முதல் இணைய...

2024-07-10 17:41:46
news-image

கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார்...

2024-07-10 17:25:00
news-image

இருட்டு அறையில் முரட்டு தேவதையாக மிரட்டும்...

2024-07-10 16:48:46