விதார்த் நடிக்கும் 'லாந்தர்' படத்தின் இசை வெளியீடு

Published By: Digital Desk 7

14 Jun, 2024 | 04:27 PM
image

சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் ஆதர்ஷ நாயகனும், அறிமுக இயக்குநர்களின் முதன்மையான விருப்பத்திற்குரிய நடிகருமான விதார்த் கதையின் நாயகனாக காக்கி உடை அணிந்து காவல் அதிகாரியாக நடித்திருக்கும் 'லாந்தர்' எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது.‌

இதனை நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, பட குழுவினரும், இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு அதிதிகளும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.‌

இயக்குநர் ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாந்தர்- இரவின் அடையாளம்' எனும் திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீண் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பத்ரிநாத் மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது தமிழ் திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இருபத்திமூன்று  நாட்களில் நிறைவடைந்து விட்டது. தெளிவான திட்டமிடல்- தொழில்நுட்பக் குழுவினர்கள் - நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பு குழுவினரின் முழுமையான ஒத்துழைப்புடன் நிறைவேறியது. இந்த கதையில் நடிகர் விதார்த்- காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அவர் புலன் விசாரணை செய்யும் ஒரு வழக்கு குறித்த சுவராசியமான திருப்பங்களுடன் திரைக்கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக நல்லதொரு பொழுதுபோக்கு படைப்பாக இருக்கும்.'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜுன் தாஸுடன் முதன்முறையாக இணையும் அதிதி...

2024-07-11 21:59:09
news-image

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'...

2024-07-11 18:07:30
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி...

2024-07-11 17:54:39
news-image

வெளியீட்டு திகதியை அறிவித்த விஜய் ஆண்டனியின்...

2024-07-11 18:06:45
news-image

சுசீந்திரன் இயக்கும் '2 K லவ்...

2024-07-11 18:06:33
news-image

அமீர் - சமுத்திரக்கனி தொடங்கி வைத்த...

2024-07-11 18:06:14
news-image

வெங்கட் பிரபு வழங்கும் 'நண்பன் ஒருவன்...

2024-07-11 18:06:00
news-image

யூரோ 2024 :16 வயதில் கோல்...

2024-07-11 12:47:35
news-image

விஜய் சேதுபதி - சூரி இணைந்து...

2024-07-10 17:26:26
news-image

ஆகஸ்டில் வெளியாகும் திரிஷாவின் முதல் இணைய...

2024-07-10 17:41:46
news-image

கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார்...

2024-07-10 17:25:00
news-image

இருட்டு அறையில் முரட்டு தேவதையாக மிரட்டும்...

2024-07-10 16:48:46