ஆப்கானிஸ்தன் உள்ளே ! நியூஸிலாந்து வெளியே ! இங்கிலாந்து ஊசலாடுகிறது !

14 Jun, 2024 | 01:52 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் சகலதுறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ஆப்கானிஸ்தான் (சி குழு) சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

இக் குழுவிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளும் ஆப்கானிஸ்தானும் சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றதால் நியூஸிலாந்து முதல் சுற்றுடன் வெளியேறவுள்ளது.

பப்புவா நியூ கினிக்கு எதிராக ட்ரினிடாட் டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்றதன் மூலமே ஆப்கானிஸ்தான் சுப்பர் 8 சுற்றில் விளையாட 5ஆவது அணியாக தகதிபெற்றது.

தென் ஆபிரிக்கா (டி குழு), இந்தியா (ஏ குழு), அவுஸ்திரேலியா (பி குழு), மேற்கிந்தியத் தீவுகள் (சி குழு) ஆகிய அணிகள் ஏற்கனவே சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

பஸால்ஹக் பாறூக்கியின் துல்லியமான பந்துவிச்சு,  குல்பாதின் நய்பின் சிறப்பான துடுப்பாட்டம் என்பன ஆப்கானிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச்செய்தன.

பஸால்ஹக் பாறூக்கி 3 போட்டிகளில் 12 விக்கெட்களுடனும் அவரது சக வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 3 போட்டிகளில் 167 ஓட்டங்களுடனும் முறையே பந்துவிச்சிலும் துடுப்பாட்டத்திலும் முதலிடங்களில் இருக்கின்றனர்.

எண்ணிக்கை சுருக்கம்

பப்புவா நியூ கினி 19.5 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 95 (கிப்லின் டொரிகா 27, அலெய் நாஓ 13, பஸால்ஹக் பாறூக்கி 16 - 3 விக்., நவீன் உல் ஹக் 4 - 2 விக்.)

ஆப்கானிஸ்தான் 15.1 ஓவர்களில் 101 - 3 விக். (குல்பாதின் நய்ப் 49 ஆ.இ., மொஹமத் நபி 16 ஆ.இ.)

ஆட்டநாயகன்: பஸால்ஹக் பாறூக்கி

இங்கிலாந்து  ஊசலாடுகிறது

அன்டிகுவா, நொர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் 16.3 ஓவர்களில் நிறைவடைந்த சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஓமானை 8 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது.

ஆதில் ராஷித், ஜொவ்ரா ஆச்சர், மார்க் வூட் ஆகியோர் 10 விக்கெட்களையும் பகிர்ந்து இங்கிலாந்தின் வெற்றிக்கு அடிகோலினர்.

ஆனால், இந்த வெற்றிக்கு மத்தியிலும் நடப்பு சம்பியன் இங்கிலாந்தின் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு தொடர்ந்தும் ஊசலாடிக்கொண்டிருக்கறது.

அவுஸ்திரேலியாவுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான போட்டியில் ஸ்கொட்லாந்து வெற்றிபெற்றால் அல்லது அப் போட்டியில் முடிவு கிடைக்காவிட்டால் ஸ்கொட்லாந்து சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெறும்.

அதேவேளை ஸ்கொட்லாந்து தோல்வி அடைந்து இங்கிலாந்து தனது கடைசிப் போட்டியில் நமிபியாவை வெற்றிகொண்டால் இங்கிலாந்து சுப்பர் 8 சுற்றுக்குள் நுழையும்.

இப் போட்டி கைவிடப்பட்டால் முதல் சுற்றுடன் இங்கிலாந்து வெளியேற நேரிடும்.

சி குழுவிலிருந்து சுப்பர் 8 சுற்றுக்கு அவுஸ்திரேலியா ஏற்கனவே தகுதிபெற்றுள்ள நிலையில் ஸ்கொட்லாந்து 5 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இங்கிலாந்து 3 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன.

ஓமானை 80 பந்துகளில் 47 ஓட்டங்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து வெற்றி இலக்கை வெறும் 19  பந்துகளில்   கடந்து வெற்றியீட்டியது.

இப் போட்டியில் இங்கிலாந்து பெற்ற 50 ஓட்டங்களில் 3 சிக்ஸ்களும் 7 பவுண்டறிகளும் அடங்கியிருந்தன.

எண்ணிக்கை சுருக்கம்

ஓமான்: 13.2 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 47 (ஷொய்ப் கான் 11, ஆதில் ராஷித் 11 - 4 விக்., ஜொவ்ரா ஆச்சர் 12 - 3 விக்., மார்க் வூட் 12 - 3 விக்.)

இங்கிலாந்து 3.1 ஓவர்களில் 50 - 2 விக். (ஜொஸ் பட்லர் 24 ஆ.இ., பில் சொல்ட் 12)

ஆட்டநாயகன்: ஆதில் ராஷித்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 10...

2024-07-20 01:04:53
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-19 20:45:59
news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26
news-image

ஆர்ஜென்டீனவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான பிரெஞ்சு...

2024-07-19 15:10:11
news-image

இலங்கை வரும் இந்திய ஒரு நாள்...

2024-07-19 12:00:51
news-image

கண்டி பெல்கன்ஸ் அணிக்கு கைகொடுத்த கமிந்து,...

2024-07-19 01:54:56
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ்;...

2024-07-19 01:48:33
news-image

அண்டர்சனுக்கு பதிலாக மார்க் வூட்

2024-07-18 16:17:16
news-image

ஜப்பானிய தேசிய கால்பந்தாட்ட வீரர் பாலியல்...

2024-07-18 16:08:49
news-image

20 வயதுக்குட்பட்ட மத்திய ஆசிய பெண்கள் ...

2024-07-18 15:59:19
news-image

மேற்கு ஆசிய நேரக் கட்டுப்பாடு செஸ்...

2024-07-18 15:54:48