வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் - நகை மற்றும் பணம் திருட்டு

Published By: Vishnu

14 Jun, 2024 | 02:20 AM
image

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை (14) மதியம் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் இன்று மதியம் குறித்த வீட்டுக்குச் சென்ற வன்முறை குழுவினர் வீட்டிலிருந்த தையல் இயந்திரம் குளிர்சாதனப் பெட்டி, ஜன்னல் கண்ணாடிகள், வீட்டுக் கதவு, ஒலிபெருக்கி சாதனங்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களை அடித்துடைத்து சேதமாக்கியதுடன், வீட்டிலிருந்த இரண்டு இலட்சத்துப் பதினோராயிரம் ரூபா பணம், மூன்று பவுன் சங்கிலி மற்றும் இரண்டு பவுன் காப்பு என்பவற்றைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், அயல் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை பொலிஸார் பார்வையிட்டுக்கொண்டு இருந்தவேளை, தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் மன்னிப்பு கேட்பதற்காக வந்தவேளை பொலிஸார் அவரை கைது செய்தனர்.

அவரை விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் ஏனையோரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாய்லாந்து செல்ல வீசா இல்லா அனுமதி...

2026-09-07 14:37:13
news-image

யோஷித ராஜபக்‌ஷ தனது மேல்முறையீட்டை மீளப்...

2026-09-07 14:25:56
news-image

தூய்மையான நாட்டை கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர...

2026-09-07 14:17:54
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 22ஆம் திருவிழா...

2026-09-07 14:04:24
news-image

நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி...

2026-09-07 13:57:30
news-image

‘GovPay’ பெயரில் போலி இணையத்தளம் -...

2026-09-07 13:49:50
news-image

யால தேசிய பூங்கா செப்டெம்பர் 14...

2026-09-07 13:49:12
news-image

செவனகல சீனித்தொழிற்சாலை வேலைநிறுத்தத்தால் ரூ.250 மில்லியன்...

2026-09-07 13:09:43
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

2026-09-07 12:51:51
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-09-07 13:09:24
news-image

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல்...

2026-09-07 12:41:37
news-image

அநுராதபுர பேரணியில் மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்பார்...

2026-09-07 12:32:54