(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் சென் வின்சன்ட் கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 25 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள பங்களாதேஷ் தனது சுப்பர் 8 சுற்ற வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. சுப்பர் 8 சுற்றுக்கு செல்ல நேபாளத்துடனான போட்டியில் பங்களாதேஷுக்கு ஒரு புள்ளியே தெவைப்படுகிறது.
இதேவேளை இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த தெர்லாந்து சுப்பர் 8 சுற்றுக்கு செல்வது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
இந்தப் போட்டியில் நெதர்லாந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகையில் 5 ஓவர்கள் பூர்த்திசெய்யப்பட்டபோது முதல் சுற்றுடன் இலங்கை வெளியேறுவது உறுதிசெய்யப்பட்டது.
ஷக்கிப் அல் ஹசன் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம், ரிஷாத் ஹொசெயனின் சிறந்த பந்துவீச்சு என்பன பங்களாதேஷின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
முதலிரண்டு விக்கெட்கள் 23 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட பின்னர் தன்ஸித் ஹசனும் ஷக்கிப் அல் ஹசனும் 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர்செய்தனர்.
தன்ஸித் ஹசன் 35 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து தௌஹித் ரிதோய் 9 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
எனினும் முன்னாள் தலைவர்களான ஷக்கிப் அல் ஹசனும் மஹ்முதுல்லாவும் 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.
மஹ்முதுல்லா 25 ஓட்டங்களைப் பெற்றார்.
ஷக்கிப் அல் ஹசன் 64 ஓட்டங்களுடனும் ஜாக்கர் அலி 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் போல் வன் மீக்கரன் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆரியன் டத் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
நெதர்லாந்து வேகமாக ஓட்டங்களைப் பெற்ற போதிலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.
மைக்கல் லெவிட் (18), மெக்ஸ் ஓ'தௌத் (12) ஆகிய இருவரும் பவர் ப்ளேக்குள் ஆட்டம் இழந்தனர்.
விக்ரம்ஜித் சிங், சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் ஆகிய இருவரும் மொத்த எண்ணிக்கையை 10ஆவது ஓவரில் 69 ஓட்டங்களாக உயர்த்தியபோது விக்ரம்ஜித் சிங் 28 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
தொடர்ந்து எங்க்ள்ப்ரெச், அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர்.
ஆனால், எங்கள்ப்ரெச் அரைகுறை மனதுடன் பந்தை அடித்து பிடிகொடுத்து 33 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். அடுத்த பந்திலேயே பாஸ் டி லீட் ஆட்டமிழந்தமை நெதர்லாந்துக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
மேலும் 6 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தபோது ஸ்கொட் எட்வேர்ட்ஸ் கவனக்குறைவான அடி மூலம் பிடிகொடுத்து 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அவரது அணி பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது.
பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களால் எதையும் சாதிக்க முடியாமல் போக நெதர்லாந்து தோல்வியைத் தழுவியது.
பந்துவீச்சில் ரிஷாத் ஹொசெய்ன் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஷக்கிப் அல் ஹசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM